நேரடித் திட்டம் / வழக்கமான திட்டம் என்றால் என்ன?

நேரடித் திட்டம் / வழக்கமான திட்டம் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும், இரண்டு திட்டங்களை வழங்குகின்றன - நேரடி (டைரக்ட்) மற்றும் வழக்கமான (ரெகுலர்). நேரடித் திட்டத்தில், முதலீட்டாளர் AMC யுடன் நேரடியாக முதலீட்டைச் செய்ய வேண்டும். இதில், பரிவர்த்தனை வசதிபடுத்தித் தருகின்ற விநியோகஸ்தர் யாரும் கிடையாது. வழக்கமான திட்டத்தில், விநியோகஸ்தர், புரோக்கர் அல்லது வங்கியாளர் போன்ற இடைத்தரகரின் மூலம் முதலீட்டாளர் முதலீடு செய்வார். இதில் AMC மூலம் இடைத்தரகருக்கு கட்டணம் வழங்கப்பட்டு, திட்டத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

எனவே, நேரடித் திட்டத்தில் விநியோகஸ்தர் கட்டணம் ஏதும் இல்லாததால், செலவு குறைவானது. அதே சமயத்தில், வழக்கமான திட்டத்தில், பரிவத்தனையை, வசதி செய்து தருவதற்காக விநியோகஸ்தருக்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். இதனால் செலவு விகிதம் சற்று அதிகமாக இருக்கும்.

MF திட்டத்தை நிர்வகிப்பதால், நிதி நிர்வாகச் செலவுகள், விற்பனை மற்றும் விநியோக செலவுகள், கஸ்டோடியன் மற்றும் பதிவாளர்களுக்கான செலவுகள் ஏற்படும். இதுபோன்ற அனைத்து செலவுகளும் ஃபண்டின் செலவு விகிதத்தில் உள்ளடக்கப்படும். இத்தகைய செலவுகள் ஒழுங்குமுறை அமைப்பான SEBI -யின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கும்.

எனவே, நேரடித் திட்டத்தின் மூலம் ஒருவர் முதலீட்டைச் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கின்ற பட்சத்தில், செலவுகள் மிச்சமாவதன் காரணமாக அவருக்கு சற்றே அதிக ரிட்டர்ன்கள் கிடைக்கலாம்.இருப்பினும், ஓர் இடைத்தரகரின் விநியோக மற்றும் சம்பந்தப்பட்ட சேவைகளை அவர் பெறமாட்டார்.

344
345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்