சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழியாகும். இதில் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும். ஒருவர் மாதம் ரூ. 500 என்ற அளவிலான சிறு தொகையை கூட தவணையாகச் செலுத்த முடியும். இது ஒரு தொடர் வைப்பு போன்றது. ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட தொகையை பற்று வைப்பதற்கு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்க முடியும் என்பதால், இது வசதியானது.

சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் போன்றவை குறித்த எந்தவொரு கவலையுமின்றி, ஒழுங்கான முறையில் முதலீடு செய்வதற்கு உதவுவதால், MF முதலீட்டாளர்களின் மத்தியில் SIP பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸால் வழங்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்,நீண்டகால முதலீட்டு உலகத்தில் நுழைவதற்கு எளிதான சிறந்த வழியாகும். இதற்கு நீங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது என்பது முக்கியமானது. அதாவது, முடிவில் அதிக ரிட்டர்ன்களைப் பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். உங்கள் முதலீடுகளில் இருந்து சிறந்த ரிட்டர்ன்களை பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீட்டை தொடங்குதல் மற்றும் வழக்கமான முறையில் முதலீடு செய்தல் ஆகியவை உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

SIP எப்படி வேலை செய்கிறது?

SIP என்பது ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது, மார்க்கெட் கீழே செல்லும்போது போது அதிக யூனிட்டுகளை வாங்குவீர்கள், மார்க்கெட் உயரும்போது குறைவான யூனிட்டுகளை வாங்குவீர்கள், இந்த இரண்டு சமயங்களிலுமே நீங்கள் முதலீடு செய்யும் தொகை ஒன்றாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம், வாங்குவதற்கான செலவை நீங்கள் சராசரி ஆக்குகிறீர்கள், காத்திருக்க வேண்டிய மன உளைச்சல் இல்லாமல் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். எனினும், SIP முறையில் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யும் முதலீடுகளும் மார்க்கெட் ஏற்ற இறக்க ரிஸ்குகளுக்கு உட்பட்டவையே.  

ஒரு உதாரணத்தின் மூலம் SIP முதலீடு எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மாதாந்திர SIP முதலீடு: ₹1,000
முதலீட்டுக் காலம்: 5 மாதங்கள்

இந்த ஐந்து மாத காலத்திலும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளின் மார்க்கெட் விலை மாறிக்கொண்டே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

மாதம் 1:

முதலீடு: ₹1,000
ஒரு யூனிட்டின் விலை: ₹50
வாங்கிய யூனிட்டுகள்: ₹1,000 / ₹50 = 20 யூனிட்டுகள்

மாதம் 2:

முதலீடு: ₹1,000
ஒரு யூனிட்டின் விலை: ₹40
வாங்கிய யூனிட்டுகள்: ₹1,000 / ₹40 = 25 யூனிட்டுகள்

மாதம் 3:

முதலீடு: ₹1,000
ஒரு யூனிட்டின் விலை: ₹20
வாங்கிய யூனிட்டுகள்: ₹1,000 / ₹20 = 50 யூனிட்டுகள்


மாதம்4:

முதலீடு: ₹1,000
ஒரு யூனிட்டின் விலை: ₹25
வாங்கிய யூனிட்டுகள்: ₹1,000 / ₹25 = 40 யூனிட்டுகள்


மாதம் 5:

முதலீடு: ₹1,000
ஒரு யூனிட்டின் விலை: ₹50
வாங்கிய யூனிட்டுகள்: ₹1,000 / ₹50 = 20 யூனிட்டுகள்

ஆகவே, இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்வது -

மொத்த முதலீடு: ₹5,000
வாங்கிய மொத்த யூனிட்டுகள்: 20 + 25 + 50 + 40 + 20 = 155 யூனிட்டுகள்.
ஒரு யூனிட்டின் சராசரி விலை: ₹5,000 / 155 யூனிட்டுகள் ≈ யூனிட் ஒன்றுக்கு ₹32.26.

மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள் உங்களுக்கு எப்படி நன்மைகளை அளிக்கும்

மியூச்சுவல் ஃபண்ட் SIPகளில் முதலீடு செய்வது பல்வேறு நன்மைகளை அளிக்கும். அந்த நன்மைகளின் பட்டியலை கீழே பார்க்கலாம்:

1. முதலீட்டில் ஒழுக்கமான அணுகுமுறை: SIPகள் ஒழுக்கமான முதலீட்டுப் பழக்கத்தை வளர்க்கின்றன. குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு அது ஒரு பழக்கமாக மாறுகிறது. 

2. கூட்டு வட்டியின் நன்மைகள்: நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக முதலீடு செய்யும்போது தான் கூட்டு வட்டியின் ஆற்றல் சிறப்பாக வேலை செய்யும். முதலீட்டிலிருந்து கிடைக்கும் ரிட்டர்ன்களும் மீண்டும் முதலீடு செய்யப்படுவதால், கூட்டு வட்டியின் மூலம் கிடைக்கும் ரிட்டர்ன்கள் வழியாகவும் SIPகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கின்றன. 

3. ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங்: முதலீட்டாளர்களுக்கு ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங்கிலும் SIPகள் உதவுகின்றன. அதாவது மார்க்கெட் கீழே செல்லும்போது நீங்கள் SIPகள் மூலம் அதிக யூனிட்டுகளை வாங்குவீர்கள், மார்க்கெட் உயரும்போது குறைவான யூனிட்டுகளை வாங்குவீர்கள். மார்க்கெட்டின் நகர்வுகளினால் முதலீடுகளுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பரவலாக்குவதற்கு இது உதவுகிறது. 

4. சௌகரியம்: SIPகள் என்பவை மிகவும் சௌகரியமான முதலீட்டு முறைகள் ஆகும். வங்கியில் மேன்டேட்டை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் SIPகளை தானாக செயல்படும்படி அமைக்க முடியும். இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு நீங்கள் தேர்வுசெய்யும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் முதலீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 

5. முதலீட்டு மூலதனம் குறைவு: நீங்கள் மிகக் குறைந்த தொகையைக் கொண்டே முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால் SIPகள் எளிதில் சமாளிக்கக்கூடிய முதலீடுகளாக உள்ளன. இளம் முதலீட்டாளர்கள் அல்லது முதலீடு செய்யத் தொடங்குவதற்காக மிகக் குறைந்த அளவே பணம் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

6. SIPகள் நெகிழ்த்தன்மை கொண்டவை: நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் SIP-இன் தொகை, முதலீடு செய்யும் கால இடைவெளி (உதாரணமாக மாதந்தோறும், காலாண்டு தோறும் என பல்வேறு கால இடைவெளிகளைத் தேர்வுசெய்யலாம்) ஆகியவற்றில் SIPகள் நெகிழ்த்தன்மை அளிக்கின்றன. 

7. SIPகள் டைவர்சிஃபிகேஷனை வழங்குகின்றன: SIPகள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யும்போது, மியூச்சுவல் ஃபண்டின் வகையைப் பொறுத்து, பல்வேறு துறைகள், புவியியல் மண்டலங்கள் போன்ற பல்வேறு அசெட் பிரிவுகளில் முதலீடு செய்யப்பட்டு டைவர்சிஃபிகேஷன் செய்யப்படுகிறது. 

8. முதலீடுகள் தொழில் முறை நேர்த்தியுடன் நிர்வகிக்கப்படும்: மியூச்சுவல் ஃபண்ட்கள் தொழில் முறை ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பகுப்பாய்வு செய்து சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கான சாத்தியக்கூறு இன்னும் அதிகரிக்கிறது. 

9. பேஸிவ் முறையில் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள்: பேஸிவ் முறையில் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் என்பவை, குறிப்பிட்ட மார்க்கெட் இன்டெக்ஸ் அல்லது பெஞ்ச் மார்க்கை விட சிறப்பாக முந்திச் செல்வதை விட அவற்றுக்கேற்ப செயல்படும் முதலீட்டு ஃபண்ட்கள் ஆகும். இந்த ஃபண்ட்களின் முக்கியமான நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்டெக்ஸ் ரிட்டன்ர்களை கூடுமானவரை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதே ஆகும். முதலீட்டாளர்கள் இந்த ஃபண்ட்களிலும் SIP முறையில் முதலீடு செய்ய முடியும். 

மியூச்சுவல் ஃபண்ட் SIPகளின் வகைகள்

மியூச்சுவல் ஃபண்ட் SIPகளின் முக்கிய வகைகள் இவை:

1. ரெகுலர் SIP: இந்த SIP-இல், சீரான கால இடைவெளிகளில் நீங்கள் தொடர்ச்சியாக ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வீர்கள் 

2. நெகிழ்த்தன்மை கொண்ட SIP: இந்த SIP-இல், முதலீட்டாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப தொகையை மாற்றலாம் அல்லது சில தவணைகளைத் தவிர்க்கலாம்.

3. பெர்பெச்சுவல் SIP: வழக்கமான SIPகளுக்கு இறுதித் தேதி இருக்கும், ஆனால் பெர்பெச்சுவல் SIPகள், முதலீட்டாளர் நிறுத்த முடிவு செய்யும் வரை தொடரும்.

4. ட்ரிகர் SIP: இவை முதலீடுகளுக்காக குறிப்பிட்ட தேதி NAV அளவு அல்லது இன்டெக்ஸ் லெவல் போன்ற ட்ரிகர்களை அமைக்க அனுமதிக்கின்றன.

5. மல்டி SIP: ஒன்றுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்ய நீங்கள் ஒரே SIP-ஐப் பயன்படுத்தலாம்.

6. ஸ்டெப்-அப் SIP: இது டாப்-அப் SIP போன்றது, ஆனால் முதலீட்டுத் தொகையின் அதிகரிப்பானது முன்பே வரையறுக்கப்பட்டது, மேலும் தொடர்ச்சியான கால இடைவெளிகளில் அதிகரிக்கும்.


SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது?

பின்வரும் முறையில் நீங்கள் SIP வழியாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்:

- - உங்கள் நிதி இலக்குகள், முதலீட்டுக் கால வரம்பு, ரிஸ்க் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமைத் தேர்ந்தெடுங்கள். 
- மியூச்சுவல் ஃபண்ட் தளத்தில் தேவைப்படுகின்ற KYC மற்றும் பிற படிகளை நிறைவு செய்யுங்கள். 
- முதலீட்டுக்காக அந்தத் தளம்/ மியூச்சுவல் ஃபண்ட்/MFD கேட்கும் தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
- தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையைத் தேர்வுசெய்து SIP-ஐ அமையுங்கள், உங்கள் முதலீடுகளுக்கான கால இடைவெளியையும், SIP-ஐ நீங்கள் எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யுங்கள். 
- குறிப்பிட்ட தேதிகளில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை டெபிட் செய்து கொள்வதற்கான ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்ஷன் அல்லது எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் மேன்டேட்டை வழங்குங்கள். தேர்ந்தெடுத்த அந்தத் தேதியில், தானாகவே உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் முதலீடு செய்யப்படும். 
- ஃபண்டின் நெட் அசெட் வேல்யூவின் அடிப்படையில் உங்கள் கணக்கிற்கு யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட் ஒதுக்கும். 

-குறிப்புகள்: எப்போது வேண்டுமானாலும் எந்த அபராதமும் இல்லாமல், உங்கள் SIP தொகையை நீங்கள் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம், இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தவும் செய்யலாம். முதலீட்டில் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே கணிப்பதற்காக, குறிப்பிட்ட ஒரு கால அளவிற்குப் பிறகு உங்கள் SIP முதலீட்டின் மூலம் எவ்வளவு ரிட்டர்ன்கள் கிடைத்திருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க SIP கால்குலேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம். வெளியேற்றக் கட்டணம் மற்றும் வரிவிதிப்புகளுக்கு உட்பட்டு, முதலீடு செய்த பணத்தை நீங்கள் வித்ட்ரா செய்யவும் முடியும்.

உங்கள் SIP தொடங்கிய பிறகு, உங்கள் முதலீடுகளைக் கண்காணிப்பதும், அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதும் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய வேலையாக இருக்கும். 

இறுதிக் கருத்து

SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு நெகிழ்த்தன்மை, செலவு குறைவு போன்ற பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கின்றன. 
SIP வகை ஒவ்வொன்றும் வெவ்வேறு நன்மைகளை வழங்கும், அவற்றில் பல்வேறு அம்சங்கள் இருக்கும், நிர்வாகக் கட்டணங்கள், வரிவிதிப்புகள் இருக்கும். இதன் மூலம், உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான SIP-ஐ நீங்கள் தேர்வுசெய்ய முடியும். 

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
 

344
347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்