பல்வேறு விதமான இலக்குகளுக்கு பல்வேறு ஃபண்டுகள் இருக்கின்றனவா?

வெவ்வேறு வகையான இலக்குகளுக்கு, வெவ்வேறு வகையான ஃபண்டுகள் உள்ளனவா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சந்தையில், பல மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் உள்ளன.இதில் எந்தத் திட்டம் சிறந்ததாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், “சிறந்தது” என்பதற்கான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரும்பாலும், சமீபத்திய காலகட்டத்தில் “சிறந்த” செயல்திறன் கொண்ட திட்டங்களை மக்கள் தேர்ந்தெடுக்க நினைப்பதுண்டு - அதாவது கடந்த ஒருசில வருடங்களாக அதிக ரிட்டர்ன்களை வழங்கிய திட்டங்கள்.

அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் படம் பிடிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில், நடித்துள்ள நடிகர்கள் குளிர்கால ஆடைகளை அணிந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். ஒருசிலருக்கு அது பிடித்துபோய், தாங்களும் அதே போன்று உடைகளை அணிய விரும்பலாம். ஆனால், கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு யாராவது மும்பை அல்லது சென்னை நகரத் தெருக்களில் செல்வது போன்று யோசித்துப் பாருங்கள்?

இதே லாஜிக் மியூச்சுவல் ஃபண்ட்ஸுக்கும் பொருந்தும். எனவே “சிறந்த” மியூச்சுவல் ஃபண்ட் என்று எதுவுமே கிடையாது – குறிப்பிட்ட சூழலில், உங்களுக்குப் பொருத்தமானது எது மற்றும் உங்கள் முதலீட்டு நோக்கத்துடன் பொருந்துவது எது என்பது குறித்துதான் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நீண்டகால இலக்குகளுக்கும் மற்றும் குறுகிய கால இலக்குகளுக்கும் என வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளன. மாடரேட் ஃபண்ட்ஸ் அல்லது கன்சர்வேடிவ் ஃபண்ட்ஸில் இருந்து அக்ரெசிவ் ஃபண்ட்ஸ் மாறுபட்டு இருக்கும். சொத்து சேர்த்தல் அல்லது எளிதில் பணமாக்குதல் தொடர்பான ஃபண்ட்ஸுடன் ஒப்பிடும் போது, வருவாய் உருவாக்குவதற்கான மாறுபட்ட ஃபண்ட்கள் உள்ளன.

எனவே, சிறந்ததைத் தேடுவதை விட, பொருத்தமானதைத் தேடுவதே நல்லது.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்