முன்கூட்டியே வித்டிரா செய்தால் ஏதேனும் அபராதம் விதிக்கப்படுமா?

முன்கூட்டியே பணத்தை எடுத்தால் ஏதேனும் அபராதங்கள் விதிக்கப்படுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒவ்வொரு ஓப்பன் எண்டட் திட்டமும் கிட்டத்தட்ட முழு சுதந்திரத்துடன் பணமெடுப்பதை அனுமதிக்கின்றது. அதாவது, நேரம் மற்றும் எடுக்கும் தொகையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனினும், ஒரு சில திட்டங்கள் வெளியேற்றக் கட்டணங்களை விதிக்கலாம்.

உதாரணத்திற்கு, ஒரு திட்டத்தில் இருந்து 1 வருடத்துக்குள் பணத்தை எடுத்தால் 1% வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம். 1 ஏப்ரல் 2016 அன்று ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்து, 31 மார்ச் 2017 தேதிக்கு முன்பு பணத்தை எடுத்தால், NAV -யின் மீது 1% அபராதம் விதிக்கப்படும். 01 பிப்ரவரி 2017 தேதிக்குள் முதலீட்டாளர் ₹ 200 பணத்தை எடுத்தால், அதிலிருந்து ₹ 2 கழிக்கப்பட்டு, யூனிட்டுக்கு ₹ 198 வழங்கப்படும்.

வெளியேற்றக் கட்டணங்கள் குறித்த அனைத்து தகவல்களும் திட்டம் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, நிதி விவரத்தாள் அல்லது முக்கியத் தகவல் குறிப்பாணையில் இதுபோன்ற தகவல்கள் குறிப்பிடபட்டிருக்கும்.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்