எந்த வயதில் ஒருவர் முதலீடு செய்யத் தொடங்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எதனால் முதலீடு செய்யவேண்டும்?
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ரஹீமும், சுரேஷும் வேலைவாய்ப்பு காரணமாக மும்பைக்கு குடிபெயர்கின்றனர். அங்கு செலவும் அதிகமாக உள்ளது.

சுரேஷ் தனது வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கிறார். மறுபுறம் ரஹீம், அந்த நகரத்தில் வாழ்வதற்கு செலவுகள் அதிகம் ஏற்படும் என்பதால், தனது வருமானத்தில் இருந்து சேமிப்பதற்கு முடிவு செய்கிறார்.

சுரேஷின் வாழ்க்கைமுறையைப் பார்த்து கவலை கொண்ட ரஹீம், இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்குவதன் நன்மைகளை அவருக்கு எடுத்துக்கூற முயற்சிக்கிறார்.

25 வயதிலேயே ரஹீம் சேமிக்கத் தொடங்குகிறார். அவர் மாதம் ₹ 5,000 முதலீடு செய்து, தனது முதலீடுகளில் இருந்து ஆண்டுக்கு 10% சம்பாதிக்கிறார். ஒட்டுமொத்தமாக அவர் ₹ 21 இலட்சம் தொகை முதலீடு செய்து, தனது 60 வயதில் ₹ 1.70 கோடி தொகையைப் பெறுகிறார்.

தனது 46 வயதில் மாதம் ₹ 30,000 சேமிக்கத் தொடங்கிய சுரேஷின் மொத்த முதலீடு ₹ 54 இலட்சம். தனது முதலீடுகளில் இருந்து ஆண்டுக்கு 10% வருமானத்தை முதலீடு செய்வதன் மூலம், தன் 60வது வயதில் அவரால் ₹1.2 கோடி தொகைக்கும் குறைவாகவே சேமிக்க முடியும்.

ரஹீமின் ₹ 21 இலட்சத்துக்கு எதிராக சுரேஷ் ₹54 இலட்சம் தொகையை முதலீடு செய்தாலும், இருவரும் ஒரே அளவிலான ரிட்டர்ன்களை பெற்றாலும், ரஹீம் தனது முதலீட்டை நீண்டகாலத்துக்குச் செய்ததால் அதிக தொகையைப் பெற்றார். முன்கூட்டியே தொடங்குவது மாயஜாலத்தை ஏற்படுத்தி, கூட்டு வட்டியின் திறனால் அதிக தொகை கிடைக்கும்.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்