வழக்கமான திட்டத்திலிருந்து நேரடித் திட்டம் எப்படி வேறுபடுகிறது?

டைரக்ட் பிளான் ரெகுலர் பிளானில் இருந்து  எப்படி வேறுபடுகிறது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

விடுமுறை நாட்களில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள், ஆனால் உங்களுக்கு அந்த இடத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். சுற்றுலாவை எப்படித் திட்டமிடுவீர்கள்? டிராவல் ஏஜண்ட்டை அழைத்து பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்கள் அல்லது தங்குவதற்கான இடம், பார்க்க வேண்டிய இடங்கள், பயண முறைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிந்துகொண்டு உங்கள் பயணத் திட்டத்தை உருவாக்குவீர்கள், பிறகு முன்பதிவு செய்வீர்கள். இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு? ஒன்றில் நீங்கள் மற்றவர் உதவி பெற்று வேலைகளை முடிக்கிறீர்கள், இன்னொன்றில் அனைத்தையும் நீங்களே செய்து முடிக்கிறீர்கள்.

டைரக்ட் பிளானுக்கும் ரெகுலர் பிளானுக்கும் கூட இதே வித்தியாசம் தான். டிஸ்ட்ரிபியூட்டர் வழியாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, உங்கள் பணம் ரெகுலர் பிளானில் முதலீடு செய்யப்படுகிறது. நேரடியாக நீங்கள் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்போது அது அந்தத் திட்டத்தின் டைரக்ட் பிளானில் முதலீடு செய்யப்படுகிறது., இரண்டு திட்டங்களிலுமே நீங்கள் பெறும் திட்டங்களும் போர்ட்ஃபோலியோவும் ஒன்றே தான், ஆனால் அவற்றின் NAV மதிப்பும் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் மட்டுமே வேறுபடும். ரெகுலர் பிளானில் டிஸ்ட்ரிபியூட்டருக்கு கமிஷன் அளிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவற்றின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ டைரக்ட் பிளான்களைவிட அதிகம். இதன் விளைவாக ஒரு ஸ்கீமின் ரெகுலர் பிளானின் NAV மதிப்பானது அதே ஸ்கீமின் டைரக்ட் பிளானுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாக உள்ளது.

ஆராய்ச்சி செய்து அறிந்துகொண்டு தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவைத் தாமே உருவாக்கிக்கொள்வது எளிது என்று நினைக்கும் முதலீட்டாளர்கள், டைரக்ட் பிளானைத் தேர்வுசெய்யலாம், மற்றவர்களுக்கு ரெகுலர் பிளான் சிறந்தது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்