மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எப்படி முதலீடு செய்யத் தொடங்குவது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது இப்போது மிக எளிதாகிவிட்டது. அதிக ஆவண வேலைகள் இல்லாமலே ஒருவர் எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் எளிதில் முதலீடு செய்ய முடியும். முதன் முறையாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வோர், KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். அது ஒருமுறை மட்டுமே. KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது முதலீட்டு ஆலோசகரின் உதவியை நாடலாம் அல்லது நீங்களே ஆன்லைனில் e-KYC சரிபார்ப்பைச் செய்யலாம். KYC என்பது மியூச்சுவல் ஃபண்ட் உலகத்திற்குத் திறவுகோல் போன்றது. KYC சரிபார்ப்பை நிறைவுசெய்துவிட்டால், ஒவ்வொரு முதலீட்டுக்கும் சரிபார்ப்பு எதுவும் தேவையில்லை, நீங்கள் எந்த ஃபண்டை வேண்டுமானாலும் தேர்வுசெய்து முதலீடு செய்யலாம்.

KYC சரிபார்ப்புக்குப் பிறகு முதலீடு செய்ய நீங்கள் தயாரானதும், மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர், பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகர், ஸ்டாக் மார்க்கெட் புரோக்கர், வங்கி அல்லது பிற நிதி இடைத்தரகு நிறுவனங்களின் உதவியுடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஆனால் நீங்களே முதலீடு செய்ய விரும்பினால், அருகிலுள்ள ஃபண்ட் ஹவுஸ் அலுவலகத்திற்கோ அவர்களின் இணையதளத்திற்கோ சென்று ஆன்லைன் முதலீடு செய்யலாம் அல்லது பிற ஏதேனும் ஆன்லைன் சேவை மூலமும் முதலீடு செய்யலாம்.  

நீங்களே முதலீடு செய்வதா, டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் செய்வதா என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. உங்கள் முதலீடுகளை நீங்களே நிர்வகிக்க விரும்பினால், ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலமோ ஏதேனும் ஆன்லைன் சேவை மூலமோ நீங்களே ஆன்லைனில் முதலீடு செய்யலாம். ஆனால் உங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டாலோ, முதலீடு செய்வது தொடர்பாக உதவி தேவைப்பட்டாலோ, டிஸ்ட்ரிபியூட்டர், முதலீட்டு ஆலோசகர், வங்கி போன்ற ஒன்றின் மூலமாக முதலீடு செய்யலாம்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்