SIP தொகையை ஒவ்வொரு மாதமும் மாற்றும் வாய்ப்பு இருக்கிறதா?

மாதாமாதம் SIP தொகையை மாற்ற முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸிலுள்ள SIP என்பது, மாரத்தானில் ஓடுவதைப் போன்றது. மாரத்தான் வீரர்கள் வருடம் முழுவதும் பயிற்சி செய்தாலும், கனவு ஓட்டம், அரை மாரத்தான் மற்றும் இறுதியாக முழு மாரத்தான் என்று படிப்படியாக தங்களின் இலக்குகளை அதிகரித்திடுவர். இதேபோன்றுதான் SIP களும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் திட்டங்கள் (SIP) என்பவை மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கான ஓர் ஒழுங்குமுறையான வழியாகும். இவை ருபீ காஸ்ட் ஆவரேஜிங் மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதோடு, நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் நன்மையையும் வழங்கிடும். பல வருடங்களுக்கு சிறிய அளவிலான மற்றும் வழக்கமான முறையிலான முதலீடுகளைச் செய்ய அனுமதிப்பதால், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதில் SIPகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதற்கு, ஆரம்பத்தில் தொடங்கிய SIP தொகையையே காலம் முழுவதும் செலுத்த வேண்டும் என்று அர்த்தமா? இதற்கான பதில் ‘இல்லை’ என்பதே.

நீங்கள் மாதம் ரூ. 3000 தொகைக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யத் தொடங்கி, இரண்டு வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். SIP -யில் நீங்கள் கூடுதல் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், SIP டாப் அப்பை தேர்ந்தெடுத்திடுங்கள். இது வழக்கமான இடைவெளிகளில்/ வருடாவருடம் முன் வரையறுத்த சதவீதம் (உதாரணமாக 50%) அல்லது குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக ரூ. 1500) தானாகவே SIP தொகையில் அதிகப்படுத்திடும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் தானாகவே SIP தொகையை அதிகரிக்க இயலாது. அதேசமயம், காலாண்டு அல்லது அரையாண்டு போன்ற குறிப்பிட்ட இடைவெளியில், SIP தொகையை டாப் அப் மூலம் அதிகரித்திட முடியும். கூடுதல் பணத்தை நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் போதெல்லாம், உங்கள் SIP கணக்கு ஃபோலியோவில் உங்களால் கூடுதல் யூனிட்களை வாங்க முடியும்.  

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்