உங்கள் SIP பேமெண்ட்களை இடையிலேயே நீங்கள் கட்டத் தவறினால் என்ன ஆகும்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டின் காலகட்டத்தின் போது SIP பேமண்ட்களை முதலீட்டாளர்கள் செலுத்த முடியாமல் போகும் சூழலில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இழப்பு ஏற்பட்டு விடுமோ என்று பலரும் கவலை கொள்கின்றனர். சில நிதிப் பிரச்சனைகள் அல்லது பணி அல்லது வர்த்தக வருமானம் குறித்த நிச்சயமற்றதன்மை போன்ற பல காரணங்களால் இதுபோன்ற சூழல்கள் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில் உங்களால் வழக்கமான முறையில் SIP பேமெண்ட்களை செலுத்த முடியாமல் போவது இயற்கைதான். SIP கள் நீண்டகால முதலீட்டுத் தேர்வு என்பதால், இடையே ஒருசில பேமெண்ட்களை நீங்கள் செலுத்தத் தவறினாலும் பரவாயில்லை. வருடாந்திர பிரீமியத்தை செலுத்தத் தவறினால் பாலிசி முடக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள காப்பீடுகளைப் போன்று அல்லாது, இங்கு உங்கள் முதலீடுகள் தொடர்ந்து ரிட்டர்ன்களை பெற்றுத் தரும் மற்றும் அதனை எந்த சமயத்திலும் எடுத்துக்கொள்ள முடியும். இருந்தாலும், நீங்கள் உங்கள் SIP -ஐ வழக்கமான முறையில் செலுத்தாத பட்சத்தில், தொடக்கத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவான பலனைப் பெறலாம் அல்லது உங்கள் நிதி இலக்குகளை அடைய முடியாமல் போகலாம்.

SIP தவணைகளைச் செலுத்தத் தவறியதற்காக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் அபராதம் எதுவும் விதிக்காது என்றாலும், தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பேமெண்டை செலுத்தவில்லை என்றால், உங்கள் SIP தானாகவே இரத்து செய்யப்பட்டுவிடும்.மேலும், ஆட்டோ டெபிட் பேமண்ட்களை நிராகரித்ததற்காக உங்கள் வங்கியும் அபராதம் விதிக்கலாம். எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் பணமுடை ஏற்படும் என்று முன்கூட்டியே அறிகின்ற பட்சத்தில், குறைந்தது 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கையைச் செய்வதன் மூலம் SIP -ஐ நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்களால் பணம் செலுத்தக் கூடிய நிலை ஏற்படும்போது, ஒரு புதிய SIP -ஐத் தொடங்கவும்.

 

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்