சிஸ்டமேட்டிக் வித்டிரால் பிளான் (SWP) என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சிலர் வழக்கமான வருமானத்துக்காக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வர் மற்றும் வழக்கமாக டிவிடென்ட் பெறும் தேர்வுகளை விரும்பிடுவர். இதுபோன்று பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக டெப்ட் சார்ந்த திட்டங்களுக்கு காலாண்டு அல்லது மாதாந்திர டிவிடென்ட் தேர்வுகள் உள்ளன. திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் இலாபங்களில் இருந்து டிவிடென்ட்கள் விநியோகிக்கப்படுகின்றன என்பதையும், ஒவ்வொரு மாதமும் அது வழங்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக டிவிடென்ட்களை வழங்குவதற்கு ஃபண்ட் ஹவுஸ் கடுமையாக முயற்சித்தாலும், சந்தையின் போக்குகள் மற்றும் நிதியின் செயல்திறன் மூலம் மட்டுமே விநியோகிக்கப்படும் இலாபம் தீர்மானிக்கப்படுகிறது.

மாதாந்திர வருமானத்தைப் பெறுவதற்கு வேறு ஒரு வழியும் உள்ளது. அது, சிஸ்டமேட்டிக் பணமேடுத்தல் திட்டம் (SWP). இதற்கு, நீங்கள் குரோத் பிளான் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் மாதாந்திரம் வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் குறிப்பிட வேண்டும். அதன்பின்பு, குறிக்கப்பட்ட தேதியில், அந்த குறிப்பிட்ட தொகைக்கு சமமான யூனிட்கள் பணமாக்கப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்படும். உதாரணத்திற்கு, ஒரு முதலீட்டாளர் ரூ. 10 இலட்சத்தை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று ரூ. 10,000 பெறவேண்டும் என்று கோருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன்பின்பு, ரூ. 10,000 தொகை மதிப்பிலான யூனிட்கள் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று பணமாக்கப்படும்.

டிவிடென்ட் மற்றும் SWP-க்கான வரிக்கணக்கீடு மாறுபடும் என்பதை நினைவில் கொண்டு, அதற்கேற்றாற் போல முதலீட்டாளர்கள் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

*மாதாந்திர வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும், எதிர்கால ரிட்டர்ன்களுக்கான உத்தரவாதமாகவும் அதனைக் கருதக்கூடாது.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்