கூட்டுவட்டியின் ஆற்றல் என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பலரும் பவர் ஆஃப் காம்பவுண்டிங்கை (கூட்டு வட்டி) ஒரு கடினமான தலைப்பாக உணர்வர். ஆனால், அது கடினமானது ஒன்றும் இல்லை. நீங்கள் இதனை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாங்கள் உதவுகிறோம்.

ஒருவர் ரூ. 10,000 தொகையை ஆண்டுக்கு 8% வட்டிவீதத்தில் முதலீடு செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வருடத்திலான வட்டி ரூ. 800. எனினும், அதே தொகையை மீண்டும் முதலீடு செய்யும்போது, அசல் முதலீடான ரூ. 10,000 தொகையுடன் கூடுதல் முதலீடான ரூ. 800 தொகையும் சேர்ந்துகொள்ளும். அதாவது இரண்டாவது வருடத்திலான வருவாய் ரூ. 864 ஆக இருக்கும். இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் சேருகின்ற கூடுதல் முதலீடு காரணமாக, ஒவ்வொரு வருடமும் வட்டித் தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

ரிட்டர்ன் தொகையை மறுமுதலீடு செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்பு எவ்வளவு தொகை சேர்ந்திருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டுத் தொகை: ரூ. 1, 00,000
ரிட்டர்ன் விகிதம்: ஆண்டுக்கு 8%.

Power of compounding

மேற்கண்ட அட்டவணையில் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம். நீண்ட காலகட்டத்துக்கு முதலீடு தக்கவைக்கப்படும்போது, வருவாய் வேகமாக வளரும். முதல் 5 வருடங்களிலான வருவாய் ரூ. 0.47 இலட்சம், அடுத்த 5 வருட காலகட்டத்திலான வருவாய் ரூ. 0.69 இலட்சம் (ரூ. 2.16 இலட்சம் – ரூ. 1.47 இலட்சம்). 21வது வருடத்தில் - ஒரு வருட காலகட்டத்தில் - ரூ. 0.37 இலட்சம்.

“காலப்போக்கில், வருவாய் அதிவேகமாக பல்கிப் பெருகிடும்.”

முக்கியமாக, காம்பவுண்டிங் அல்லது கூட்டு வட்டி என்பது அசல் மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட வட்டி இரண்டிற்கும் சேர்த்து வருவாயை ஈட்டும் செயல்முறை ஆகும் - வருவாயை மறுமுதலீடு செய்வதால், அந்த வருவாயும் வருவாயைப் பெற்றிடும்.

*இந்தக் கணக்கீடுகள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை. மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல. மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்