மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச காலம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்களில் நான் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச காலகட்டம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்சில் முதலீட்டைத் தக்கவைப்பதற்கான குறைந்தபட்ச காலகட்டம் ஒருநாள் மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அதனைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

ஒருநாள் என்ற குறைந்தபட்ச காலகட்டத்தை புரிந்துகொள்வது என்பது எளிதானது. அதாவது ஒரு குறிப்பிட்ட NAV -க்கான யூனிட்களை ஒதுக்கப் பெறுதல் மற்றும் அதன் பின்னர் அடுத்த நாளின் NAV -யில் அதனை பணமாக்குதல். எனினும், அதிகபட்ச காலகட்டத்தின் ‘முடிவற்ற’ இயல்பு என்பது என்ன? தினசரி NAV கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் ஓப்பன் எண்டு திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. மேலும் அவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தக்க வைக்கின்ற முதலீட்டாளர்களும் உள்ளனர்! திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் வரையிலும், விற்பனை மற்றும் கொள்முதல் விலையின் அடிப்படையில் NAV -ஐ வழங்கும் வரையிலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டைத் தக்க வைக்கமுடியும். அறங்காவலர்களிடம் இருந்து ஒப்புதலைப் பெற்ற பின்பு ,ஓர் ஓப்பன் எண்டு ஃபண்டை ஃபண்ட் ஹவுஸ் நிறுத்தத் தீர்மானிக்கும் வரை அது தொடர்ந்து இருக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்