சேமிப்புக் கணக்கு அல்லது FD போல ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் நிலையான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதில்லை?

சேமிப்புக் கணக்கு அல்லது FD போன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எதனால் நிலையான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதில்லை? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன் என்பது, முதலீடு செய்யப்பட்ட துறைகள், பல்வேறு சந்தைகளின் போக்குகள், நிதி மேலாண்மைக் குழுவின் திறன் மற்றும் முதலீட்டுக் காலகட்டம் போன்ற பல விஷயங்களைச் சார்ந்துள்ளது.

இவற்றில் பல காரணிகள் நிச்சயமற்றவை என்பதால், ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதமளிக்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவு வரை நிலையான வைப்பு இந்தக் காரணிகளால் பாதிக்கப்படுவதில்லை.

ஃபிக்ஸட் டெபாசிட்களில் - நிலையான காலகட்டத்துக்கு மட்டுமே ரிட்டர்ன்கள் நிலையாக இருக்கும். இந்த ரிட்டர்ன்களும் காலகட்டமும், வைப்புத் திட்டத்தை வழங்கும் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுமே ஒழிய, வைப்பாளரால் தீர்மானிக்கப்படாது. எனவே, ஒருவர் தனது பணத்தை ஆறு வருடங்களுக்கு முதலீடு செய்ய விரும்பி, ஐந்து வருட காலகட்டத்துக்கு மட்டுமே டெபாசிட் செய்யும் தேர்வு கிடைக்கப்பெற்றால், ஐந்து வருடங்களுக்கான ரிட்டர்ன்களை மட்டுமே நம்மால் அறிய முடியும். ஒட்டுமொத்த ஆறு வருடத்துக்கும் ரிட்டர்ன் என்னவாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. இவ்வாறு, திட்டத்தின் முதிர்வும், முதலீட்டாளரின் முதலீட்டுக் காலகட்டமும் சிறப்பாகப் பொருந்துகின்ற உத்தரவாதமான ரிட்டர்ன் கொடுக்கின்ற முதலீட்டுத் திட்டங்களாக இருக்கும் சூழல்களில் மட்டுமே முதலீட்டின் ரிட்டர்ன்களை நாம் அறிய முடியும்.

பிற எல்லா சூழல்களிலும், முதலீட்டாளரின் முதலீட்டுக் காலகட்டத்தைக் கொண்டு முதலீட்டின் ரிட்டர்ன்களை அறிய முடியாது.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்