மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நான் எவ்வாறு முதலீடு செய்யத் தொடங்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நான் எவ்வாறு முதலீடு செய்யத் தொடங்கலாம்?
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு நீங்கள் சில அடிப்படை நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (AMC) அலுவலத்தில் நேரடியாகவோ அல்லது ஏற்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலோ (PoA) அல்லது ஆலோசகர், வங்கியாளர், விநியோகஸ்தர் அல்லது புரோக்கர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகரின் மூலமோ இந்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்யலாம்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) நடைமுறையைப் பூர்த்தி செய்ய வேண்டும். திட்டத்தின் விண்ணப்பப் படிவத்துடன் (முக்கியத் தகவல் குறிப்பாணை என்றும் அறியப்படுகிறது) சேர்த்து, பூர்த்தி செய்யப்பட்ட KYC படிவமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து கணக்குதாரர்களின் பெயர்கள், PAN எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற மிக முக்கியமான விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதால், அதனை கவனமாக நிரப்ப வேண்டும். மேலும் இதில் அனைத்து கணக்குதாரர்களாலும் கையொப்பமிடப்பட வேண்டும். இவற்றில் பெரும்பாலானவற்றை ஆன்லைன் இணையதளத்திலேயே செய்யமுடியும்.

புதிய முதலீட்டாளர்கள் தங்களின் நடைமுறையை சுமூகமாகவும், எளிதாகவும்பெற, ஆலோசகர்களின் உதவியைப் பெறலாம். மேலும், அனைத்து முதலீட்டாளர்களும், முதலீடு செய்வதற்கு முன்பு, திட்டம் தொடர்பான முக்கியமான ஆவணங்ளை படித்து, தேர்ந்தெடுத்துள்ள திட்டத்தின் அபாயங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்