ஒரு திட்டத்தின் அதிக அல்லது குறைவான NAV உங்கள் முதலீட்டு முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஒரு திட்டத்தின் உயர்ந்த அல்லது குறைந்த NAV-யால் உங்கள் முதலீட்டு முடிவு பாதிக்கப்படுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

'ரெகுலர்' பீட்சாவை விட்டுவிட்டு 'லார்ஜ்' பீட்சாவை ஆர்டர் செய்யும்போது, இரண்டின் சுவையிலும் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? கண்டிப்பாக இல்லை! இரண்டும் ஒரே செய்முறை மற்றும் செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவை அவற்றின் அளவிலும் விலையிலும் மட்டுமே வேறுபடுகின்றன. மெனுவிலிருந்து நீங்கள் எந்த அளவிலான ஃபார்ம்ஹவுஸ் பீட்சாவை ஆர்டர் செய்தாலும், அது மீடியமோ லார்ஜோ ஒரே சுவைதான் உங்களுக்குக் கிடைக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களும் பீட்சாவைப் போன்ற அதே சுவையை வழங்குகின்றன. நீங்கள் ஒரு ஃபண்டை வாங்கும்போது, அதாவது அந்த ஃபண்டின் ஒரு யூனிட்டை சொந்தமாக்கிக் கொள்ள அதன் விலையை, அதாவது NAV-ஐச் செலுத்துகிறீர்கள். அதிக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கும் ஒரு பெரிய ஃபண்டு, ஒரு பெரிய சொத்து அடிப்படையைக் கொண்டிருக்கும். இதனால் அதற்கு அதிக NAV இருக்கும். ஆனால் அதே ஃபண்ட், தொடக்கத்தில் மிகக் குறைந்த NAV-ஐ கொண்டு இருந்திருக்கலாம். ஒரு ஃபண்ட் பெரியதாக வளரும்போது அதிக முதலீட்டாளர்கள் அதில் சேருகிறார்கள், அதனால் அந்த ஃபண்டின் NAV காலப்போக்கில் அதிகரிக்கிறது. இதற்கு ஃபண்டின் ரெஸிபி மாறிவிட்டது அல்லது அதை உருவாக்கும் செயல்முறை மாறிவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாமா? 

ஃபண்டின் நோக்கம் மாறவில்லை என்றால், வெவ்வேறு சொத்து வகைகள், செக்யூரிட்டிகளின் வகைகள் மற்றும் நிதி மேலாண்மைச் செயல்முறை ஆகியவற்றிற்கான ஒதுக்கீடும் மாறாது. எனவே ஃபார்ம்ஹவுஸ் பீட்சாவின் சுவை, அதன் அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக இருப்பதைப் போன்றுதான், ஃபண்டின் NAVயின் அளவு காரணமாக உங்கள் ரிட்டர்ன் மதிப்பு பாதிக்கப்படாது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்