எந்த வயதில் இருந்து ஒருவர் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

இந்தச் சிறிய வயதிலேயே நான் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது சரியா என்று யோசிக்கிறீர்களா? எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்று கேள்வி உள்ளதா? இப்போதே அதற்கு சரியான தருணம்தான். ஆம், கவலையை விடுங்கள்! முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அந்த நொடியே முதலீடு செய்யத் தயாராகிவிட்டீர்கள்! ஆனால், எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் கூட்டு வட்டியின் அபார சக்தியால் நீண்ட காலம் முதலீடு செய்யும்போது மியூச்சுவல் ஃபண்ட்கள் பெரும் செல்வத்தை உண்டாக்கக்கூடியவை.  

கூட்டு வட்டியின் மாய வித்தை உங்கள் முதலீடுகளை மிகுந்த வளர்ச்சியடையச் செய்யும், ஆகவே வேலைக்குச் சேர்ந்த பிறகு கூடிய விரைவிலேயே நீங்கள் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். சொல்லப்போனால், நீங்கள் முதல் சம்பளம் வாங்கும் நாளிலேயே மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடும் செய்யத் தொடங்கிவிட்டால் இன்னும் நல்லது. உங்கள் மாத வருமானத்திலிருந்து சிறு தொகையை உங்களால் சேமித்து, SIP மூலமாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய முடியும் என்றால், உங்கள் பணம் பெருக போதுமான அளவு நீண்ட கால அவகாசம் கிடைக்கும். தொடர்ச்சியாக ஒழுங்கு மாறாமல் முதலீடு செய்யும் அணுகுமுறையைக் கைவிடாமல் இருந்தால், எதிர்காலத்தில் தேவையான நேரத்தில் அதன் பலனை அடைந்து மகிழ்வீர்கள். உங்கள் ரிஸ்க் தயார்நிலைக்குப் (எவ்வளவு ரிஸ்க் எடுக்க நீங்கள் தயார் என்பது) பொருத்தமான ரிஸ்க் அளவு கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் முன்னேறும் சமயம், நமது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க நமது வாழ்வின் இலக்குகளும் பெரிதாகிக்கொண்டே வரும். உங்கள் முதல் மாத சம்பளத்திலேயே SIP மூலம் முதலீடு செய்து உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குங்கள். இந்த இலக்குகளை சிரமமின்றி அடைய, உங்கள் சம்பளம் அதிகரிக்கும்போதேல்லாம் முதலீட்டை அதிகரியுங்கள். இன்னும் முதலீடு செய்ய நீங்கள் தொடங்கிவில்லை என்றாலும் பரவாயில்லை. மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தைத் தொடங்க இன்னும் தாமதமாகிவிடவில்லை. ஏனெனில் கூட்டு வட்டியின் சக்தி அபாரமானது, இருப்பினும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் நீங்கள் தள்ளிப்போட்டாலும் உங்கள் ரிட்டர்ன்ஸின் அளவு கணிசமாகக் குறைந்துவிடும். எனவே ஓரிரு ஆண்டுகள் முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்கினாலும் கணிசமான தொகை கூடுதலாகக் கிடைக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்