ரிஸ்கோமீட்டர் மற்றும் பல்வேறு அளவுகள் என்பவை எவை?

ரிஸ்க்-ஓ-மீட்டர் என்றால் என்ன? அதன் வெவ்வேறு நிலைகள் யாவை?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ரிஸ்க்-ஓ-மீட்டர் என்பது, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேன்ஜ் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) அமைப்பு மியூச்சுவல் ஃபண்ட்களுக்காக அறிமுகப்படுத்திய, தரப்படுத்தப்பட்ட ரிஸ்க் அளவீட்டு ஸ்கேல் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் ஆவணங்கள் அனைத்தும் முகப்புப் பக்கத்திலேயே, ரிஸ்க்-ஓ-மீட்டரைக் காட்ட வேண்டும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட ஃபண்டில் உள்ள ரிஸ்க்கை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

ரிஸ்க்-ஓ-மீட்டர், ரிஸ்க்கை ஆறு வெவ்வேறு நிலைகளின் கீழ் வகைப்படுத்துகிறது. குறைவு, குறைவு முதல் மிதமானது, மிதமானது, ஓரளவு அதிகம், அதிகம் மற்றும் மிக அதிகம் ஆகியவை இதில் அடங்கும். இடதுபுறத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கப் படங்களைப் பார்க்கவும்.

குறைந்த ரிஸ்க்: இந்த வகையின் கீழ் வரும் ஃபண்ட்களில் அதற்குரிய பாதுகாப்புகளின் காரணமாக குறைந்த ரிஸ்க் இருக்கும். முதலீட்டிற்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு இவை ஏற்றதாகும்.

குறைவு முதல் மிதமான ரிஸ்க்: நடுத்தரம் முதல் நீண்ட நாள் அடிப்படையில் ஓரளவு லாபத்தைப் பெற, சிறிதளவு ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாகும். மிகவும் குறுகியகால ஃபண்ட்கள் இந்த வகையின்கீழ் வரும்.

மிதமான ரிஸ்க்: இது சில ரிஸ்க்குகளை எடுத்து தங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. பெரும்பாலான டைனமிக் பாண்ட் ஃபண்ட்கள் இந்த வகையின் கீழ் வரும்.

ஓரளவு அதிகமான ரிஸ்க்: இந்த ஃபண்ட்களில் சற்று அதிகமான ரிஸ்க் இருக்கும். கொஞ்சம் அதிகமான ரிஸ்க் புரொஃபைல் உள்ள முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாகும். அதிக வளர்ச்சியையும் லாபத்தையும் நோக்கமாகக் கொண்டு சில நிச்சயமற்ற சூழல்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாகும்.

அதிக ரிஸ்க்: இந்த வகையின் கீழ் வரும் ஃபண்ட்ஸ் பிரதானமாக ஈக்விட்டிகளில் முதலீடு செய்யப்படும். அதிக அளவிலான லாபத்தைப் பெற அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு இவை ஏற்றதாகும்.

மிக அதிகமான ரிஸ்க்: இவை நிலையற்ற ஸ்டாக்குகள் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களில் முதலீடு செய்யப்படும் மிக அதிக ரிஸ்க் உள்ள ஃபண்ட்கள் ஆகும். மிக அதிக லாபம் அடைய, மிக அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றவையாகும்.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்