மியூச்சுவல் ஃபண்டுகளில் எனது சேமிப்பை வைத்து நான் ரிஸ்க் எடுக்கலாமா?

ரிஸ்க் எடுத்து எனது சேமிப்பை நான் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

எல்லோருக்குமே ரிஸ்க் இல்லாமலே அதிக ரிட்டர்ன்ஸ் வேண்டும் என்று ஆசை இருக்கும் தான். பணத்தை முதலீடு கூட செய்யாமல், அதை அடைவது சாத்தியமா? உங்கள் சேமிப்பை முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணவீக்கத்தை விடச் சிறந்த ரிட்டர்ன்ஸ் பெற, ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். (பணவீக்கம் உங்கள் சேமிப்பை எப்படி பாதிக்கிறது என்று அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும்) இந்த முதலீட்டை நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி, புதிய வீடு வாங்குவது அல்லது பணி ஒய்வு என ஏதேனும் உங்கள் எதிர்கால இலக்குகளுக்காக செய்யலாம். எதுவாக இருந்தாலும், கடின உழைப்பால் நீங்கள் சம்பாதித்த பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் பத்திரமாகப் போட்டு வைக்காமல், ஏன் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று உங்களுக்குக் கவலை ஏற்படலாம்., அது நியாயமும் கூட.

மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிஸ்க் உள்ளவை தான். அவை ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிட்டர்ன்ஸ் கொடுப்பதில்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கிரிக்கெட் போன்றது! இந்திய அணி பிட்ச்சிற்கு செல்லும்போது, நாம் வெல்வோமா தோற்போமா என்று நமக்குத் தெரியாது. தோற்றுவிடக்கூடும் என்ற பெரிய ரிஸ்க் இருக்கவே செய்கிறது, அதே சமயம் வெல்வதற்கான பெரிய வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. இந்திய அணி ரிஸ்க் எடுத்து விளையாடாவிட்டால், வெற்றியை அவர்கள் சுவைக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடும்! சிலர் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கின்றனர். உங்கள் மூலதனத்தை ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யாத வரை, மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மறுபுறத்தை நீங்கள் கான முடியாது. FD, தங்க ஆபரணங்கள், ரியல் எஸ்டேட் போன்ற பிற முதலீடுகளைக் காட்டிலும், பணவீக்கத்திற்கு ஏற்ப சிறந்த ரிட்டர்ன்ஸைத் தான் அதன் மறுபக்கம் என்று குறிப்பிட்டோம்!

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்