திட்டம் தொடர்பான ஆவணங்கள் என்பவை எவை? என்ன தகவல்களை இந்த ஆவணங்கள் வழங்கும்?

திட்டம் தொடர்பான ஆவணங்கள் என்றால் என்ன? இந்த ஆவணங்கள் என்ன தகவலை வழங்குகின்றன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

எல்லா மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களிலும் பின்வரும் செய்தியைக் காணமுடியும்: “திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.” இந்த ஆவணங்கள் என்னென்ன?

3 முக்கியமான ஆவணங்கள் உள்ளன: முக்கியத் தகவல் ஆவணம் (KIM), திட்டத் தகவல் ஆவணம் (SID) மற்றும் கூடுதல் தகவல் அறிக்கை (SAI).

சொத்து மேலாண்மை நிறுவனத்தால் (AMC) இவை ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றி தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியாவுக்கு (SEBI) சமர்ப்பிக்கப்படும்.

SID பின்வருவன போன்ற தகவலைக் கொண்டிருக்கும்:

  1. முதலீட்டு நோக்கம் மற்றும் கொள்கைகள், சொத்து ஒதுக்கீட்டு வடிவம், கட்டணங்கள் மற்றும் பணமாக்குதல் விதிகள் போன்ற அனைத்து அடிப்படை அம்சங்கள்.
  2. நிதி மேலாண்மைக் குழுவின் விவரங்கள்
  3. திட்டத்தில் உள்ள அனைத்து ரிஸ்க் காரணிகள் மற்றும் ஆபத்துக் குறைப்பு வழிமுறைகள்.
  4. விற்பனைக் கட்டணங்கள், திட்டம் மற்றும் விருப்பத்தேர்வுகள், கடந்தகால செயல்திறன், அளவுகோல் போன்ற திட்ட விவரங்கள்.
  5. யூனிட் ஹோல்டரின் பொதுவான தகவல்.
  6. AMC கிளைகளின் பட்டியல், முதலீட்டாளர் சேவை மையங்கள், ஏற்பதற்கான அதிகாரப்பூர்வ மையங்கள் போன்ற பிற விவரங்களின் பட்டியல்.

SAI பின்வருவன போன்ற தகவலைக் கொண்டிருக்கும்:

  1. மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு - ஸ்பான்சர்கள், சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் அறங்காவலர்கள்.
  2. AMC மற்றும் பதிவாளர்கள், பாதுகாவலர்கள், வங்கி அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் போன்ற அசோஸியேட்டுகளின் அனைத்து தகவல்கள்.
  3. அனைத்து நிதி மற்றும் சட்டப் பிரச்சினைகள்.

விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் KIM ஆனது, SID -இன் சுருக்கமான பதிப்பு ஆகும். அதன் பெயருக்கு ஏற்றாற்போல, ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக முதலீட்டாளர் அறியவேண்டிய அனைத்து முக்கியத் தகவல்களையும் இது உள்ளடக்குகிறது. ஒவ்வொரு விண்ணப்பப் படிவத்துடனும், KIM கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்