"மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது" என்பது முதலீட்டாளர்களுக்கு தகவல்களையும் விழிப்புணர்வையும் வழங்குவதற்காக AMFI முன்னெடுத்துள்ள திட்டமாகும். இது நிதி அறிவை வளர்த்துக்கொள்வதை ஊக்குவிக்கவும், மியூச்சுவல் ஃபண்டின் பலன்களை வலியுறுத்திக் கூறவும் உருவாக்கப்பட்டுள்ளது. SIP முறையில் தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்டில் சிறு தொகைகளை முதலீடு செய்வது காலப்போக்கில் எப்படி பெரும் செல்வம் சேர்க்க உதவும் என்பதை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ள உதவுவதே எங்கள் நோக்கம்.
பல மொழிகளில் விளம்பரங்கள், டிஜிட்டல் வீடியோக்கள் மற்றும் இணையதளம் மூலம், சொல்ல வரும் கருத்துகளை எளிமையாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் எடுத்துரைக்கும் MFSH கேம்பெயின், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய பல மூடநம்பிக்கைகளைப் பொய்யென நிரூபிக்க உதவியுள்ளது, முதலீட்டாளர்களிடையே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பிரபலமாக்கியுள்ளது, கணிசமான எண்ணிக்கையில் முதலீட்டாளர் கணக்குகளையும் முதலீடுகளையும் சாத்தியமாக்கி தொழிற்துறைக்கும் உதவியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது பற்றி
செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் (SEBI) வழிகாட்டலின் கீழ், அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) அமைப்பின் துணையோடு, 2017 மார்ச்சில் 'மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது' நிறுவப்பட்டது. இது மியூச்சுவல் ஃபண்டுகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்குவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு தகவல்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவே தொடங்கப்பட்டது. மக்களுக்கு நாங்கள் தகவல்களை வழங்க தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம், ரேடியோ, அச்சு ஊடகம், வெளிப்புற ஊடக வடிவங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். அவற்றை பல்வேறு மொழிகளிலும் வழங்குகிறோம்.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) பற்றி
இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறையை தொழில்முறை ரீதியாகவும், ஆரோக்கியமானதாகவும், நெறிமுறை சார்ந்தும் மேம்படுத்துவதற்காகவும், மியூச்சுவல் ஃபண்டுகளையும் அவற்றை வைத்திருப்பவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் அனைத்து அம்சங்களிலும் தரநிலைகளை மேம்படுத்துவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) செயல்பட்டு வருகிறது.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இந்தியா (AMFI) என்பது, இந்தியாவில் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவில் (SEBI) பதிவுபெற்ற அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளின் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின், லாபநோக்கற்ற தொழிற்துறைக் கூட்டமைப்பாகும். 1995 ஆகஸ்ட் 22 அன்று ஒரு லாப நோக்கற்ற அமைப்பாக AMFI தொடங்கப்பட்டது.
‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது’ என்பது பல்வேறு மொழிகளில் ஊடகப் பிரச்சாரங்களின் மூலம் நாடு முழுவதும் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக SEBI-இன் வழிகாட்டலின் கீழ் AMFI தொடங்கிய முன்னெடுப்பாகும். இது நீண்ட முதலீட்டுக் காலங்களில் செல்வத்தைப் பெருக்குவதற்கான தனித்துவமான ஒரு அசெட் வகையாக மியூச்சுவல் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக AMFI எடுத்த ஒரு முக்கியமான முயற்சியாகும்.
AMFI பற்றியும் அதன் முதலீட்டாளர் விழிப்புணர்வுத் திட்டங்கள் பற்றியும் மேலும் தகவலை இந்தத் தளத்தில் பார்க்கலாம்: www.amfiindia.com
எங்கள் இலட்சியம்
மியூச்சுவல் ஃபண்ட் உலகத்தை எளிமையானதாக்குவதும், மக்கள் இன்னும் விவரமான முடிவுகளை எடுக்கவும், தங்கள் நிதி இலக்குகளை நோக்கி சிறு அடியெடுத்து வைக்கவும் உதவுவதுமே எங்கள் இலட்சியமாகும்.


