Skip to main content

அணுகல் தன்மைக்கான அறிக்கை

மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துப் பயனர்களுக்கும் டிஜிட்டல் அணுகலை உறுதி செய்ய AMFI உறுதிபூண்டுள்ளது. எங்கள் இணையதளம் பயன்படுத்தக்கூடியதாகவும் அனைத்து விவரங்களையும் கொண்டிருப்பதையும் உறுதி செய்ய பொருத்தமான அணுகல் தன்மைத் தரநிலைகளைப் பயன்படுத்துவதுடன் அனைவருக்கும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.


அணுகல் தன்மையை ஆதரிப்பதற்கான படிகள்

எங்கள் இணையதளத்தின் அணுகல் தன்மையை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்:

  • வழக்கமான அணுகல் தன்மைத் தணிக்கைகள் மற்றும் சோதனை
  • WCAG 2.1 நிலை AA வழிகாட்டுதல்களுக்கு இணங்க வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
  • அணுகக்கூடிய HTML, ARIA பண்புக்கூறுகள் மற்றும் செமண்டிக் மார்க்-அப் பயன்பாடு
  • சிறந்த நடைமுறைகள் குறித்து எங்கள் குழுக்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகள். 


இணக்க நிலை

இந்த வழிகாட்டுதல்களில் மூன்று நிலைகள் உள்ளன: நிலை A, நிலை AA  மற்றும் நிலை AAA, மேலும் இணையதளத்திற்கு நிலை AA-ஐ எங்கள் இலக்காக நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இணைய உள்ளடக்க அணுகல் தன்மை வழிகாட்டுதல்கள் (WCAG) 2.1 நிலை AA-ஐ கடைப்பிடிப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். இந்த வழிகாட்டுதல்கள் காட்சி,  செவிப்புலன், உடல், பேச்சு,  அறிவாற்றல், மொழி, கற்றல் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான குறைபாடுகள் உள்ளவர்களும் எளிதாக உள்ளடக்கத்தை அணுகுவதற்கு ஏதுவாக மாற்ற உதவுகின்றன.


கருத்து

எங்கள் இணையதளத்தின் அணுகல் தன்மை குறித்த உங்கள் கருத்தை வரவேற்கிறோம். அணுகல் தன்மையில் ஏதேனும் தடைகளை நீங்கள் எதிர்கொண்டாலோ மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் இருந்தாலோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்: இணைப்பு.
 

இணக்கத்தன்மை

இந்த இணையதளம் பின்வருவனவற்றுடன் இணக்கத்துடன் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது:

  • Chrome, Firefox, Safari, Edge போன்ற மாடர்ன் பிரவுசர்கள்
  • திரை வாசிப்பான்கள், கீபோர்டு மூலம் மட்டும் வழிசெலுத்துதல் மற்றும் பேச்சை அடையாளம் காணும் மென்பொருள் போன்ற உதவித் தொழில்நுட்பங்கள்


கட்டுப்பாடுகள்

நாங்கள் அணுகல் தன்மைத் தரநிலைகளுக்கு இணங்க முயற்சித்தாலும், சில உள்ளடக்கம் இன்னும் முழுமையாக இணங்காமல் இருக்கலாம். எங்கள் இணையதளம் முழுவதும் இந்த சிக்கல்கள் இல்லாமல் தீர்க்கவும், அணுகல் தன்மையை மேம்படுத்தவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.