ஏ.எம்.எஃப்.ஐ (AMFI)
தொழில்முறையிலான, ஆரோக்கியமான மற்றும் நெறிமுறையிலான வழிகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் அவற்றின் யூனிட் ஹோல்டர்களின் நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் கண்ணோட்டத்துடன் அதன் அனைத்துப் பகுதிகளிலும் தரநிலைகளைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அசோசியேஷன் (AMFI) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து சொத்து நிர்வாக நிறுவனங்களின் SEBI -யில் பதிவு செய்யப்பட்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கூட்டமைப்பான AMFI, ஆகஸ்ட் 22, 1995 அன்று ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகத் தொடங்கப்பட்டது. இதுவரை, SEBI -யில் பதிவு செய்துள்ள 42 சொத்து மேலாண்மை நிறுவனங்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளன
கூடுதல் விவரங்களுக்கு, பார்வையிடவும்: www.amfiindia.com