அனைத்து நாட்களிலும் பணத்தை எடுக்க முடியுமா அல்லது குறிப்பிட்ட நாட்கள் மட்டுமா?

எல்லா நாட்களும் நான் பணத்தை எடுக்க முடியுமா அல்லது ஒருசில குறிப்பிட்ட நாட்களில்தான் அதனைச் செய்யமுடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஓப்பன் எண்டு ஃபண்ட் எல்லா வர்த்தக நாட்களிலும் பணமெடுத்தலை அனுமதிக்கிறது. வர்த்தகமல்லாத நாளன்று அல்லது குறிப்பிட்ட கட்-ஆஃப் நேரத்துக்குப் பின்பு, உதாரணத்திற்கு மதியம் 03:00 மணிக்குப் பின்பு, முதலீட்டாளர் சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணமெடுத்தல் கோரிக்கையானது அடுத்த வர்த்தக நாளின் போது செயலாக்கப்படும். செயலாக்கப்படும் நாளின் நிகர சொத்து மதிப்பின்படி (NAV) பணமெடுத்தல்கள் மேற்கொள்ளப்படும். எல்லா பணமெடுத்தல்களும் வழக்கமாக 10 வர்த்தக நாட்களுக்குள் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

திட்டத்தின் போர்ட்ஃபோலியோ எண்ணைக் குறிப்பிட்டு பணமெடுத்தல் கோரிக்கையின் கையொப்பமிட்ட படிவத்தை ஒப்படைப்பதன் மூலம் பணமெடுத்தல்கள் செயலாக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் தளங்களிலும் பணமெடுத்தல்களை கோரமுடியும். அதற்குத் தேவையான பாதுகாப்புக் குறியீடுகள் முதலீட்டாளர்களிடம் இருக்க வேண்டியது அவசியம்.

ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம்களுடன் (ELSS) செய்யப்பட்ட முதலீடுகளுக்கு 3 வருட லாக் இன் காலகட்டம் இருக்கும். இந்தக் காலகட்டத்துக்குப் பின்பு எந்தவொரு வர்த்தக நாளிலும் பணமெடுத்தலை செய்யலாம்.

அசாதாரண சூழல்களின் போது மட்டுமே பணமெடுத்தல்கள் கட்டுப்படுத்தப்படலாம். அறங்காவலர் வாரியத்தின் ஒப்புதலின் கீழ், பணமாக்குதலிலான பிரச்சினை, கேபிட்டல் மார்க்கெட் மூடப்படுதல், செயல்பாட்டு நெருக்கடி அல்லது SEBI -யின் வழிகாட்டுதல் போன்ற சூழல்களின் போது, AMC கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இந்தச் சூழல்கள் மிகவும் அரிதாகவே ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்