உங்கள் இலக்கை அடைய சரியான SIP தொகையைத் தேர்வுசெய்யுங்கள்

உங்கள் இலக்கை அடைய சரியான SIP தொகையைத் தேர்வுசெய்யுங்கள் zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் சீரான விதத்தில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும். இந்தத் திட்டத்தில், சீரான இடைவெளியில் (தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது காலாண்டு தோறும்) ஒரு முதலீட்டாளர் (அவர்களுக்குப் பிடித்த) மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். SIP மூலம், அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் வழங்கும் தொகையைத் தேர்வுசெய்து SIP தேதியை முதலீட்டாளர் தீர்மானிக்க வேண்டும். 

SIP என்பது முதலீட்டுத் தயாரிப்பு இல்லை, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும். இதில் குறைந்தபட்ச SIP தொகை ரூ.500 ஆகும். ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் மற்றொரு முறை லம்ப்-சம், இதில் ஒரே ஒருமுறை மட்டும் மொத்தத் தொகையாக முதலீடு செய்வீர்கள். 

SIP-இல் முதலீடு செய்வதற்கான தொகையை முதலில் தீர்மானிக்க வேண்டும். முதலீடு செய்பவர் தங்களுடைய நிதி இலக்குகளை வரையறுத்து அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். மூன்று பெரிய பிரிவுகளில் உங்கள் இலக்குகளை வகைப்படுத்தவும்: நீண்டகாலம், நடுத்தரக் காலம் மற்றும் குறுகிய காலம். இவற்றின் மூலம் உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம். 

நீண்டகால இலக்குகள் என்பவை பொதுவாக 5 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவை. 5 அல்லது அதற்குக் குறைவான ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நடுத்தர இலக்குகள் எனப்படும். அதே நேரத்தில், 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டியவை குறுகிய கால இலக்குகள் எனப்படும். உங்கள் இலக்குகளைத் தீர்மானித்தபிறகு, இலக்கு அடிப்படையிலான திட்டத்தை நீங்கள் உறுதிசெய்யலாம். 

உதாரணமாக, அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் ஒரு நிகழ்வுக்கு (கல்வி, பிள்ளையின் திருமணம், வீடு வாங்குதல் மற்றும் பல) மொத்தத் தொகையைச் சேமிக்க நீங்கள் நீண்டகாலத் திட்டத்தை வைத்திருக்கிறீர்கள் எனில், இந்தத் திட்டத்திற்கு ஆகும் தற்போதைய செலவைத் தெரிந்துகொள்ளுங்கள். 

இந்த இலக்கின் தற்போதைய செலவு மற்றும் அதை அடைவதற்கான வருடங்களின் எண்ணிக்கை பற்றி உங்களுக்குத் தெரியும். விலைவாசி விகிதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், உங்கள் இலக்கின் செலவு அதிகரிக்கும். 

விலைவாசி விகிதத்துடன் தற்போதைய தொகையைக் கணக்கிட்டால், உங்கள் இலக்கை அடைவதற்கான இறுதித் தொகை உங்களுக்குக் கிடைக்கும். இந்த இறுதித் தொகையைப் பயன்படுத்தி உங்கள் SIP முதலீட்டுக்கான உரிய தொகையைத் தெரிந்துகொள்ளலாம். 

 

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

290
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்