சாத்தியமான பலன்களைப் பெற ரிஸ்கைக் குறைக்கலாம்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ரிஸ்க்குகளை கட்டுப்படுத்த முடியும். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து சிறந்த வருமானத்தைப் பெற முடியும்!

முதலீடுகளில் “ரிஸ்க்” என்று வரும்போது, முதலீட்டாளராக உங்களுக்கு பின்வரும் சில கேள்விகள் உடனடியாக மனதில் தோன்றும்... “என் பணம் பாதுகாப்பாக இருக்குமா?” “எனக்கு எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும்?” “எனக்குத் தேவை ஏற்படும்போது என்னால் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?”… இவை எல்லாமே நியாயமான கேள்விகள்தான். அதேசமயத்தில், மியூச்சுவல் ஃபண்ட்ஸை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு, நாம் மூன்று கோணங்களில் இருந்து அதனைப் பார்க்கலாம்.

நிபுணத்துவ நிதி மேலாண்மை - தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிர்வகிக்கப்படுகிறது. எனவே,ஒரு முதலீட்டாளராக, அவர்களின் ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவத்தின் வாயிலாக நீங்கள் பலனடைவீர்கள். இது ரிஸ்க்கை முழுமையாக தவிர்க்காது என்றாலும், நிச்சயமாக குறைத்திடும்.

பலவகைப்படுத்தல்மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பல்வேறு செக்யூரிட்டிகளின் தொகுப்பில் முதலீடு செய்திடும். ஒரு குறிப்பிட்ட செக்யூரிட்டி, குறைந்த செயல்திறனுடன் இருந்தாலும் கூட, பரவலாக முதலீடு செய்வதால் அதன்மூலம் ஏற்படும் ரிஸ்க் குறைந்திடும்.

உங்கள் முதலீட்டு நோக்கத்துக்கு ஏற்ற ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபண்டுடன் முதலீட்டின் காலஅளவு ஒத்துப்போனால், குறுகியகால ஏற்ற,இறக்கங்களில் இருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தால், அது சந்தையின் குறுகியகால ஏற்ற,இறக்கங்களால் பாதிக்கப்படலாம். ஆனால், நீண்டகாலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஈக்விட்டிகளுடன் தொடர்புடைய நீண்டகால ரிட்டர்ன்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விளம்பரங்களில் வரக்கூடிய வழக்கமான பொறுப்புத்துறப்பு காரணமாக, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் ரிஸ்க் நிறைந்தது என்று பலர் நம்புகின்றனர். முதலீட்டாளர் பாதுகாப்பை உறுதி செய்திடும் கடுமையான ஒழுங்குமுறைகளும், நிபுணத்துவ நிதி மேலாண்மையும் மற்றும் பரவலான முதலீடும் ரிஸ்கை பெருமளவில் குறைத்திடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்