இள வயதிலேயே முதலீட்டை ஆரம்பிப்பதற்கான ஐந்து காரணங்கள்

இள வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவதற்கான ஐந்து காரணங்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒருவரின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி முதலீடு செய்வதுதான் என்று தெரிந்தும், பலர் வாழ்வின் பெரும்பகுதி காத்திருந்துவிட்டு காலம் கடந்த பிறகு முதலீடு செய்யத் தொடங்குவார்கள். முதல் முறை வேலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் எதிர்காலத்திற்குத் திட்டமிடாமல் தங்கள் வாழ்க்கை முறையை இன்னும் உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதிவரை அவர்கள் முதலீடே செய்யத் தொடங்குவதில்லை என்று கூறலாம்.

தாமதமானாலும் கூட முதலீடு செய்யத் தொடங்குவது நல்லதுதான். ஆனாலும் முன்கூட்டியே தொடங்குவதால் பல நன்மைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இளம் வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர்களுக்கு பணத் தேவைக்கான பொறுப்புகள் குறைவாக இருக்கும் என்பதால், வாழ்வின் பிற்பகுதியில் முதலீடு செய்பவர்களைவிட இவர்களால் அதிகம் சேமிக்க முடியும்.  

இளம் வயதிலேயே ஏன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்களை இப்போது பார்க்கலாம்:

  1. கூட்டு வட்டியின் அபார சக்தியால் அதிக பலன்

ஆரம்பத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குவதில் உள்ள முக்கியமான நன்மை என்னவென்றால், உங்களுக்கு சேமிப்பதற்கு அதிக கால அளவு கிடைக்கும் என்பது தான். கூட்டு வட்டியின் சக்தியால்ஆற்றலால், அதிக கால அளவில் உங்கள் முதலீட்டை அதிக அளவிற்குப் பெருக்கிட உங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. முதலீட்டில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன்களும் கூட்டுவட்டி முறையில் பெருகும். அதாவது நீங்கள் செய்த முதலீடுகளில் கிடைக்கும் வட்டி மீண்டும் முதலீடு செய்யப்பட்டு அதிக ரிட்டர்னை உருவாக்கும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:

நீங்கள் 25 வயதில் உங்கள் முதல் சம்பளம் பெறும்போது, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானைத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சராசரியாக ஆண்டுக்கு 10% என்னும் ரிட்டர்ன் கிடைக்கும் வகையில் SIP-இல் ரூ 1000 முதலீடு செய்கிறீர்கள்.

இந்த வயதில்

நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் காலம் 

முதலீடு செய்யும் தொகை (ரூ.)

பெறக்கூடிய மொத்தத் தொகை (ரூ.)

35

10 வருடங்கள்

1.2 லட்சம்

2.05 லட்சம்

45

20 வருடங்கள்

2.4 லட்சம்

7.59 லட்சம்

55

30 வருடங்கள்

3.6 லட்சம்

22.6 லட்சம்

60

35 வருடங்கள்

4.2 லட்சம்

37.97 லட்சம்

*இது கட்டாயமாக உதாரணத்திற்காக மட்டுமே. அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ரிட்டர்ன்கள் முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையிலானவை மற்றும் விளக்க.

இதில் பார்க்கும்போதே உங்களுக்குத் தெரியும். வெறும் ரூ.1,000 முதலீடு செய்தால் கூட அதிக காலம் அளவில் அது பெரிய அளவில் அதிகரிக்கிறது.

அதோடு, லம்ப்சம் முதலீடுகளுக்கும் கூட்டு வட்டியின் இந்தப் பலன் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

  1. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்

வெகுமதி வேண்டுமென்றால் ரிஸ்க்கையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே கிடையாது. நீண்ட காலம் முதலீடு செய்து வைத்திருக்கும்போது, உங்கள் ரிஸ்க்கை நீங்கள் இன்னும் நன்றாக நிர்வகிக்க முடியும். நீங்கள் இளம் பருவத்தில் இருக்கும்போது, ஒப்பீட்டில் அதிக ரிஸ்க்கானவற்றில் முதலீடு செய்து, வயது அதிகரிக்கும்போது ரிஸ்க்கைக் குறைத்துக்கொள்ளலாம். வயது அதிகமாகும்போது, EMIகள், குழந்தைகளின் கல்வி, வீட்டு அடமானக்கடன் போன்ற பல்வேறு பொறுப்புகள் சூழ்ந்திருக்கும். அப்போது அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வது கடினமாக இருக்கும். இளம் வயதிலேயே முதலீடு செய்யும்போது, ரிஸ்க்கைக் கட்டுப்படுத்தி, பணம் சார்ந்த மன அழுத்தம் எதுவும் இல்லாமல் உங்கள் செல்வத்தைப் பெருகச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

  1. நஷ்டங்களை நிர்வகிப்பது எளிதாகிறது

சீக்கிரமே தொடங்கினால், உங்களுக்குப் போதுமான கால அவகாசம் கிடைக்கும். தவறான தகவல் அடிப்படையில் முடிவெடுப்பது, மார்க்கெட்டின் நிலையற்ற தன்மை போன்றவற்றால் இழப்புகள் ஏற்படலாம். தேவைப்பட்டால், உங்கள் முதலீட்டு அணுமுறையை மாற்றி இழப்புகளைச் சிறப்பாக கையாளலாம். உதாரணமாக, மார்க்கெட் நிலவரங்களில் நிலையற்ற தன்மை காரணமாக இழப்புகள் ஏற்பட்டால், மியூச்சுவல் ஃபண்ட்களில் SIPகள் மூலம் அந்த இழப்புகளைச் சிறப்பாக கையாளலாம். SIPகள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கும்போது, மார்க்கெட் சரிவடையும் சமயங்களில் அதிக யூனிட்டுகளை வாங்குவதன் மூலமும் மார்க்கெட் ஏற்றம் காணும் சமயங்களில் குறைவான யூனிட்டுகளை வாங்குவதன் மூலமும் நீங்கள் உங்கள் முதலீட்டு செலவை சராசரியாக்குவீர்கள். இதைத்தான் ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் என்கிறோம். சீக்கிரமே முதலீடு செய்யத் தொடங்கினால், ‘ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங்’ உங்கள் இழப்புகளைச் சிறப்பாகக் கையாள உதவலாம். 

  1. விவரமறிந்து சிறந்த முடிவுகளை எடுக்கலாம்

உங்களுக்கு நேரம் அதிகம் இருக்கும்போது, பல்வேறு முதலீட்டு விருப்பங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து, தேவைப்படும் போதெல்லாம் உங்கள் போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்யலாம். இதனால் உங்கள் முதலீடுகளுக்கு நேரக்கூடிய ரிஸ்க்குகளைக் குறைக்கவும் உங்கள் ரிட்டர்ன்களை மேம்படுத்தவும் உங்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஆரம்பத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குவதால் பல்வேறு உத்திகளை முயன்று பார்த்து மேம்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைக்கும், இதனால் மார்க்கெட் பற்றிய நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதும் எளிதாக இருக்கும். பிற்காலத்தில் முதலீடு செய்வது பற்றிய மன அழுத்தமோ பயமோ குறையும்.

  1. பணி ஓய்வுக்கான இலக்கை முன்கூட்டியே அடையலாம்

சரியான முதலீட்டு வழிகளில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்தால், பணி ஓய்வுக்கான இலக்கை விரைந்து அடைவது சாத்தியமாகும்.

முன்கூட்டியே பணி ஒய்வு பெற்றுக்கொள்ள உங்களிடம் ரூ. 1 கோடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள்

35 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள்

SIP தொகை (ரூ.)

10,100

SIP தொகை (ரூ.)

10,100

உத்தேச ரிட்டர்ன் விகிதம்

12%

உத்தேச ரிட்டர்ன் விகிதம்

12%

முதலீடு செய்யும் தொகை (ரூ.)

24.24 லட்சம்

முதலீடு செய்யும் தொகை (ரூ.)

12.12 லட்சம்

45 வயதில் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகை (ரூ.)

1 கோடி

45 வயதில் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகை (ரூ.)

23.5 லட்சம்

*இது கட்டாயமாக உதாரணத்திற்காக மட்டுமே. அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ரிட்டர்ன்கள் முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையிலானவை மற்றும் விளக்க.

மேலே உள்ள உதாரணத்தில் விளக்கியது போல், முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்குவது, உங்கள் இலக்குத் தொகையை விரைந்து அடைய உதவும். அதுமட்டுமின்றி முன்கூட்டியே பணி ஒய்வு பெறலாம் (அல்லது பிற இலக்குக்கும் உதவும்).

இறுதிக் கருத்து

ஆரம்பத்திலேயே முதலீடுகளைத் தொடங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இளம் முதலீட்டாளராக இருக்கும்போது, மார்க்கெட்டில் செலவிட அதிக நேரம் இருப்பதால், ரிஸ்க்கை நிர்வகிக்கவும், எமர்ஜென்சி ஃபண்டைத் தயார் செய்யவும் கூடுதல் நேரம் கிடைக்கும், உங்கள் நிதி இலக்குகளை விரைந்தும் அடையலாம். ஆகவே, உங்கள் முதலீடுகளைப் பெருக்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்க விரும்பினால், இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது மிகவும் நல்ல யோசனை.

பொறுப்புதுறப்பு:

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

286
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்