இலக்கு அடிப்படையிலான முதலீடு: உங்கள் இலக்குகள் ஒவ்வொன்றுக்கும் SIP முதலீடுகள்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நம் எல்லோருக்கும் வாழ்வில் பல்வேறு இலக்குகள் உள்ளன. சில சமயம் அவை உடனடியாகக் கண்முன் வரும், சில சமயம் அவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வரும். உதாரணமாக, ஒருவர் வேலை செய்யத் தொடங்கும்போது, மாதாந்திர செலவுகள், அவ்வப்போது மனதில் தோன்றுவதை வாங்குவது போன்றவை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றாது. ஆனால், பின்னாளில் இலக்குகள் கண்முன்னே வரத் தொடங்கும். கார் வாங்குவது, பைக் வாங்குவது, விடுமுறை நாட்களில் வெளியே செல்வது, வெளிநாடு சுற்றுலா சொல்வது, திருமணம் போன்ற இலக்குகள் வரத் தொடங்கும்.

நம்முடைய தற்போதைய நிதி இலக்குகள் மற்றும் வாழ்வில் பின்னாளில் வருகின்ற இலக்குகள் என அனைத்திற்கும் நாம் நம்மைத் தயாராக வைத்திருப்பதற்கு உதவக்கூடிய தீர்வு ஒன்று உள்ளது:

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)
SIP மூலம் மாதம் ஒரு சிறிய தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். அதுமட்டுமல்ல. நீங்கள் பணி ஒய்வு, திருமணம், கார்/வீடு வாங்குவது போன்ற பல்வேறு இலக்குகளை சாதிக்க மியூச்சுவல் ஃபண்டில் கூட்டு வட்டியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  முதலீட்டிலிருந்து வருமானத்தினையும் பெறலாம். மேலும் கிடைக்கும் ரிட்டர்ன்கள் மேலும் ரிட்டர்ன்களை உருவாக்கும் போது இவை அனைத்தும் சாத்தியமாகிடும். முதலீட்டாளர் பெறும் மொத்த ரிட்டர்ன் கூட்டு வட்டியால் பெருகும். கூட்டு வட்டியின் சக்தியைப் பற்றி இங்கு படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இலக்குக்காக முதலீடு செய்யும் ஒருவர் இங்கே காட்டப்பட்டுள்ளது போல் முதலீடு செய்யத் தொடங்கலாம்:

இலக்குத் தொகை முதலீட்டுக் காலம்  MF ஸ்கீம் எதிர்பார்க்கக்கூடிய ரிட்டர்ன்* முதலீட்டுத் தொகை
ரூ. 1 லட்சம் 2-3 ​​வருடங்கள்​ டெப்ட் ஃபண்ட் 6-8% மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500 
ரூ. 4 லட்சம் 5 ​​வருடங்கள்​ பேலன்ஸ்டு ஃபண்ட் 10% மாதம் ஒன்றுக்கு ரூ. 5,000 
ரூ. 25 லட்சம் 10 ​​வருடங்கள்​ ஈக்விட்டி ஃபண்ட் 12% மாதம் ஒன்றுக்கு ரூ. 10,000 
ரூ. 10 லட்சம் 15 ​​வருடங்கள்​ ஈக்விட்டி ஃபண்ட் 12% மாதம் ஒன்றுக்கு ரூ. 2,000 
ரூ. 30 லட்சம் 20 ​​வருடங்கள்​ ஈக்விட்டி ஃபண்ட் 12% மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 
ரூ. 1.5 கோடி 20 ​​வருடங்கள்​ டெப்ட் ஃபண்ட் 8% ரூ. 30 லட்சம் (லம்ப்சம்)

*MF வகைக்கான கருதப்படும் ரிட்டர்ன்கள்
குறிப்பு: விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே; சந்தை ரிஸ்க்கைப் பொறுத்து உண்மையான மதிப்புகள் மாறக்கூடும்.

வருடம் செல்ல செல்ல, உங்கள் இலக்குகள் ஒவ்வொன்றுக்குமான உங்கள் நீண்ட கால SIP முதலீடுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவை நீங்கள் நிறைவேற்றியதும், மற்ற இலக்குகள் ஒவ்வொன்றுக்குமான SIP தொகையை ரூ. 2,000 நீங்கள் அதிகரிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் முதலில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உங்கள் இலக்குகளுக்காக சேமிக்க முடியும்.
பணி ஓய்வுக்குப் பிறகு உங்கள் ரிஸ்க் எக்ஸ்போஷரைக் குறைப்பதற்காக, ரிஸ்க் குறைவான டெப்ட் இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்கின்ற ரிஸ்க் குறைவான ஃபண்டுக்கு உங்கள் முதலீடுகளை மாற்ற நீங்கள் விரும்பலாம். உண்மையில், சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் திட்டத்தின் மூலம் இரண்டாவது வருமானத்தினைப்பெறவும் இந்த முதலீடுகள் உதவலாம்.

இப்படி, உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப SIPகள் மூலம் பொருத்தமான கால அளவுக்கு பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் மூலம், வெவ்வேறு கால அளவுகளில் எதிர் வருகின்ற உங்கள் வாழ்வின் எல்லாக் கனவுகளையும் இலக்குகளையும் நீங்கள் அடையலாம்.

*மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும்.

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்