டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் எப்படி FMPகளில் இருந்து வேறுபடுகின்றன?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் FMP ஃபண்ட்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளார்கள் குறிப்பாக வட்டி விகித ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க் ஆகிய இரண்டு ரிஸ்க்குகளை எதிர்கொள்கின்றனர். நீண்ட கால G-Secகள் கிரெடிட் ரிஸ்க்கை சிறப்பாகக் கையாளுகின்றன, அதே சமயம் அவை அதிக வட்டி விகித ரிஸ்க்கால் பாதிக்கப்படுபவையாக உள்ளன. மற்றொருபுறம், குறைந்த கால அளவுள்ள ஃபண்ட்கள் அல்லது லிக்விட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க்கை சிறப்பாகக் கையாளுகின்றன, ஆனால் கிரெடிட் தர சிக்கலால் பாதிக்கப்படுகின்றன.

FMP ஃபண்ட்களும் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களும் குறிப்பிட்ட நிலையான முதிர்ச்சித் தேதியைக் கொண்டவை, இதனால் வாங்கித் தக்கவைக்கும் உத்தியின் மூலம் வட்டி விகித ரிஸ்க்கை சிறந்த முறையில் கையாளும்படி உள்ளன.  எனினும், சில அம்சங்களில் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் FMP ஃபண்ட்களைவிட சிறப்பாகத் திகழ்கின்றன. இவற்றின் போர்ட்ஃபோலியோ G-Secகள், ஸ்டேட் டெவலப்மென்ட் லான்ஸ், AAA தொடர்பான PSU பாண்டுகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இவை வட்டி விகித ரிஸ்க்கை சமாளிப்பது மட்டுமின்றி, FMP ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் கிரெடிட் ரிஸ்க்கையும் சிறப்பாகக் கையாளுகின்றன.

FMPகள் குளோஸ் எண்டட் ஃபண்ட்கள், இவை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், குறைவான பரிவர்த்தனை அளவுகளின் காரணமாக இவற்றின் பணமாக மாற்றத்தக்க தன்மை குறைவு. டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ஃபண்ட்கள் ஓப்பன் எண்டட் ஃபண்ட்களாக இருப்பதால் இவற்றின் பணமாக மாற்றத்தக்க தன்மை அதிகம். டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன. டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு இன்டெக்ஸ் ஃபண்ட்களாகவும் டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ETFகளாகவும் கிடைக்கின்றன. இதனால், ஃபண்டின் கட்டமைப்பைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்களுக்கு அதிகத் தெரிவுகளை டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் அளிக்கின்றன.

FMP ஃபண்ட்களில் போர்ட்ஃபோலியோவை மேனேஜரே கட்டமைக்க வேண்டும், ஆனால் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் இயல்பில் பேசிவ் தன்மை கொண்டவையாக இருப்பதால், FMPகளுடன் ஒப்பிடுகையில் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் குறைவான செலவு விகிதத்தைக் கொண்டுள்ளன. டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களில், 3-10 ஆண்டுகள் வரையில் பல விதமான மெச்சூரிட்டி கால அளவுகளைத் தேர்வு செய்ய முடியும். ஆனால் பெரும்பாலான FMP ஃபண்ட்களில் வழக்கமாக 1-3 ஆண்டுகளே கால வரம்பாகத் தேர்வு செய்ய முடியும். ஆகவே, நீண்ட கால முதலீட்டு வரம்பு கொண்ட முதலீட்டாளர்களுக்கு FMP ஃபண்ட்கள் ஏற்றவையாக இல்லாமல் போகலாம்.

FMP ஃபண்ட்கள் குளோஸ் எண்டட் ஃபண்ட்களாக இருப்பதால், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களைவிட ஒரு விஷயத்தில் சிறப்பாகத் திகழ்கின்றன. எளிதில் பணமாக மாற்றத்தக்க தன்மையை இது வரம்புக்குட்படுத்துகிறது என்றாலும், ஃபண்ட் முதிர்ச்சியடையும் வரை முதலீட்டை அப்படியே தக்கவைக்க முதலீட்டாளர்களை இது நிர்ப்பந்திக்கிறது, இதனால் வட்டி விகித ரிஸ்க்கில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் ஓப்பன் எண்டட் ஃபண்ட்களாக இருப்பதால், முதிர்ச்சித் தேதி வரை முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும் என்ற உறுதியோடு நீங்கள் இருக்க வேண்டியதில்லை என்று பொருளல்ல. அப்படி நீங்கள் செய்யத் தவறினால், நல்ல ரிட்டர்ன் கிடைப்பதற்கான உத்தரவாதம், வட்டி விகித ரிஸ்க்கில் இருந்து பாதுகாப்பு ஆகிய இரண்டு நன்மைகளுமே இல்லாமல் போய்விடும். ஆகவே, ஃபண்ட் முதிர்ச்சித் தேதி வரை முதலீட்டைத் தக்கவைக்க முடிகின்றவர்கள் மற்றும் ஃபண்டின் முதிர்ச்சித் தேதிக்குப் .பொருந்துகின்ற இலக்கு வரம்பைக் கொண்டுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமே டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள், ஏற்றவை.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்