எப்படி நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உங்கள் KYC நிறைவடைந்து இருந்தால், ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் ஆஃப்லைனிலோ ஆன்லைனிலோ நேரடியாக முதலிடு செய்யலாம். ஆன்லைனில் பரிவர்த்தனையைச் செய்வது உங்களுக்கு சிரமமாக இருந்தால், அருகிலுள்ள கிளைக்குச் செல்வதன் மூலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் நேரடியாக முதலீடு செய்ய ஆன்லைன் பரிவர்த்தனைகளே சிறந்த வழி, இதில் கமிஷன் தொகைகளையும் மிச்சப்படுத்தலாம். ஒரு ஃபண்டின் இணையதளத்தின் வழியாகவோ அதன் RTA தளத்தின் வழியாகவோ   நிதித் தொழில்நுட்ப நிறுவன பிளாட்ஃபார்ம் வழியாகவோ நீங்கள் முதலீடு செய்யலாம்.  ஒரு ஃபண்டின் இணையதளத்தின் வழியாக நேரடியாக நீங்களே முதலீடு செய்வதற்கு பல லாகின்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டியிருக்கும்.

டைரக்ட் பிளானில் நீங்கள் முதலீடு செய்யும்போது நிதித் திட்டம் உருவாக்குவது, உங்கள் நிதி இலக்குகளுக்குப் பொருத்தமான ஃபண்ட்களைத் தேர்வு செய்வது, தேவைப்பட்டால் சமநிலைப்படுத்துவதற்காக அடிக்கடி போர்ட்ஃபோலியோவைக் கண்காணிப்பது போன்ற அனைத்தும் உங்கள் பொறுப்பு. சரியான ஃபண்ட்களைத் தேர்வு செய்வது, போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பது பற்றியெல்லாம் எல்லோருக்கும் அதிக விவரம் இருப்பதில்லை. ஆகவே, இவற்றை எளிதாகச் சமாளிக்கும் திறனுள்ள முதலீட்டாளர்களுக்கே டைரக்ட் பிளான் பொருத்தமானது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அதிகம் தெரியாதவர்கள் டிஸ்ட்ரிபியூட்டர் வழியே முதலீடு செய்வதே நல்லது.  

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்