மியூச்சுவல் ஃபண்டு செயல்திறனை எப்படிக் கண்காணிப்பது?

மியூச்சுவல் ஃபண்ட் எப்படி செயலாற்றி வருகிறது என்பதை ஒருவர் எவ்வாறு கண்காணிக்க முடியும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

இன்றைய டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில், முதலீட்டையும், போர்ட்ஃபோலியோ செயல்திறனையும் கண்காணிப்பது என்பது சுலபமான ஒன்றாகிவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் அல்லது முதலீட்டு ஆலோசகர்கள் போன்ற நிதி வல்லுநர்கள் உங்கள் நிதிப் பயணத்தில் ஈடுசெய்ய முடியாத பங்குதாரர்களாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த முதலீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது. ஸ்பிரெட் ஷீட்கள் மற்றும் கிராஃப்கள் கொண்டு நீங்கள் உங்கள் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை.

ஓர் ஆலோசகர் அல்லது இடைத்தரகரின் மூலம் முதலீடு செய்த எந்தவொருவரும் வழக்கமான தகவல்தொடர்புகளைப் பெற்று, தங்களின் போர்ட்ஃபோலியோவையும் திட்டத்தின் செயல்திறனையும் மறுஆய்வு அறிக்கைகளில் கண்காணிக்க முடியும். இந்த அறிக்கைகள் இல்லாமல் இருந்தாலும் கூட, திட்டத்தின் செயல்திறனைக் கண்காணிக்க உதவுகின்ற பல்வேறு இணைய தளங்களும் மொபைல் ஆப்களும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட போர்ட்ஃபோலியோவை கண்காணிக்கும் வகையில் இதுபோன்ற சில இணையதளங்களை நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளவும் முடியும். பிரபலமான வணிகப் பத்திரிகைகளில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறித்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் நீங்கள் வழக்கமான முறையில் பெற முடியும்.

கூடுதலாக, நிதி விவரத்தாளின் மூலம் நீங்கள் உங்கள் முதலீடுகளைக் கண்காணிக்க முடியும். இது திட்டச் செயல்திறனின் வெளிப்பாடு மற்றும் போர்ட்ஃபோலியோவை சிறப்புப்படுத்திக் காட்டி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மீதான ஒரு கண்ணோட்டத்தை வழங்கிடும் ஒருபக்க ஆவணமாகும் மற்றும் இது மியூச்சுவல் ஃபண்டின் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகின்றன. இது திட்டத்தின் ஆரோக்கியத்தைக் குறிக்கின்ற ஒரு அறிக்கை அட்டை போன்றது.

விவரத்தாளில் என்னென்ன அடங்கியிருக்கும் என்பதை இடதுபுறத்தில் உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்