ரிஸ்கை நிர்வகிக்க எப்படி மியூச்சுவல் ஃபண்டுகள் உதவும்?

ரிஸ்க்கை  தவிர்ப்பதற்கு  மியூச்சுவல் ஃபண்ட்ஸ்  எவ்வாறு உதவுகிறது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ரிஸ்க்குகள் பல வடிவங்களில் ஏற்படும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டிருந்தால், பிரைஸ் ரிஸ்க் அல்லது மார்கெட் ரிஸ்க் அல்லது கம்பெனி ரிஸ்க் போன்றவை இருக்கும். மேற்கண்ட காரணங்களால் அல்லது அவற்றின் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை குறையலாம் அல்லதுவீழ்ச்சி காணலாம்.

இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருக்கக்கூடிய ஒரு வழக்கமான போர்ட்ஃபோலியோ, பல செக்யூரிட்டிகளைக் கொண்டிருக்கும். இதை “பலவகைப்படுத்தல் (டைவர்ஸிஃபிகேஷன்)” என்று அழைக்கலாம். உண்மையில், பலவகைப்படுத்தல் என்ற முறையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று. ஒன்று அல்லது ஒருசில செக்யூரிட்டீஸின் விலை குறைந்தாலும், அதனால் போர்ட்ஃபோலியோவின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமோர் முக்கியமான ரிஸ்க் என்னவென்றால், லிக்விடிட்டி ரிஸ்க் லிக்விடிட்டி ரிஸ்க் என்றால் என்ன? இது ஒரு சொத்தை, ரொக்கமாக மாற்றுவதற்கான எளிமைத்தன்மை ஆகும். ஒரு முதலீட்டாளர் 10 வருட காலம் லாக்-இன் கொண்டு ஒரு முதலீட்டை செய்துள்ளார். ஆனால் அவருக்கு 3வது வருடத்தில் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது ரொக்கமாக மாற்றுவதிலான பிரச்சினை, அதாவது லிக்விடிட்டி பிரச்சினை எழுகிறது. இந்த சமயத்தில் பணத்தேவைதான் அவரின் முன்னுரிமையாக இருக்குமே தவிர, ரிட்டர்ன்கள் இல்லை. ஒழுங்குமுறை மற்றும் கட்டமைப்பின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்கள் பெரும் லிக்விடிட்டியை வழங்குகின்றன. முதலீட்டையும், அதனைப் பணமாக்குவதையும் எளிமைப்படுத்தும் வகையில் போர்ட்ஃபோலியோக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

343
478
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்