என் குழந்தையின் கல்விக்காக சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படிப் பயன்படுத்துவது?

என் குழந்தையின் கல்விக்காக சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படிப் பயன்படுத்துவது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக பணம் சேமிக்க பல வழிகள் உள்ளன. பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டால், கல்வி நிதிக்காக பெறும் தொகையைச் சேர்ப்பதற்கு, சேமிப்பதைவிட முதலீடு செய்வதே சிறந்த வழியாக இருக்கும். உங்கள் குழந்தையின் கல்விக்குத் திட்டமிடுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் அப்படிப்பட்ட ஒரு நல்ல முதலீட்டு வழியாக இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட்களின் மூலம், நீங்கள் ஈக்விட்டி மார்க்கெட் பற்றித் தெரிந்துகொள்கிறீர்கள், அதே சமயம் தனிப்பட்ட ஸ்டாக்கில் முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க்கையும் டைவர்சிஃபை செய்ய முடிகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் லம்ப்சம், SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) என்று இரண்டு வழிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். கல்வித் தேவைகள் என்பதை இலக்காகக் கொண்டிருக்கும்பட்சத்தில், SIP அதற்கு சிறந்த வழியாக இருக்கும். 

உதாரணமாக, 10 வருடங்களுக்கு, மாதந்தோறும் ரூ15,000 நீங்கள் முதலீடு செய்தால், ரிட்டர்ன் விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்துக்கொண்டால், மொத்தம் உங்களுக்கு ரூ. 34,85,086 சேர்ந்திருக்கும். 

உங்கள் குழந்தையின் கல்விக்கு, மியூச்சுவல் ஃபண்ட் ஏன் சிறந்த முதலீட்டு வழியாக உள்ளது?

  • அவை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றவை. 
  • சிறந்த ரிட்டர்ன்களை வழங்கும் சாத்தியமுள்ளவை. 
  • ஃபண்ட் நிபுணர்களால் நிர்வகிக்கப்படும். 
  • நெகிழ்த்தன்மையும் லிக்விடிட்டியும் கொண்டவை. 
  • அதிகபட்ச பலனைப் பெறவும், ரிஸ்க்கை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் டைவர்சிஃபை செய்ய முடியும். 
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீட்டு அம்சங்களைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். 
  • வரிச் சலுகைகளும் கிடைக்கும். 
  • நீங்கள் SIP முறை, லம்ப்சம் ஆகிய இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வுசெய்து கொள்ளலாம். 

 

பெற்றோர் அனைவருக்குமே, குழந்தையின் கல்வி என்பது அவர்களது முதலீட்டுக்கான மிக முக்கியமான நோக்கமாக இருக்கும். தரமான கல்விக்கு அதிகம் செலவாகிறது என்பதும் இது ஒரு முக்கியமான நிதி இலக்காக இருப்பதற்கு மற்றொரு காரணம். இந்த இலக்குக்காக பணம் சேர்க்க விரும்புபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறந்த வழியாகும். இதன் மூலம் ஈக்விட்டி மார்க்கெட்டை அவர்கள் மறைமுகமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது (ஈக்விட்டிகள் அதிகபட்ச ரிட்டர்ன் விகிதங்களை வழங்குபவை என்று கருதப்படும்பட்சத்தில்)

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

 

344
290
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்