ஒரு மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாட்டை எப்படிக் கண்டறிவது?

Video

கார் வாங்குவதோ, ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதோ, எதுவானாலும் முன்பே போதுமான தகவல் கையில் இல்லாமல் மக்கள் முடிவெடுக்க வேண்டி இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆனால் இன்றோ, தகவல்கள் நம் விரல்நுனியில் உள்ளன. இப்போதெல்லாம் சாப்பிட என்ன ஆர்டர் செய்யலாம் என்பது போன்ற சிறு விஷயங்கள் தொடங்கி, எல்லாவற்றையுமே ஓரளவு ஆராய்ச்சி செய்து தகவல்களைப் பார்த்த பிறகே செய்கிறோம்.

பல்வேறு வகையான ஃபண்ட்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு ஸ்கீம்களையும் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பது உங்களுக்குக் கடினமாக உள்ளதா? கவலையே வேண்டாம். ஒவ்வொரு வகையின் கீழும் உள்ள பல்வேறு ஸ்கீம்களின் நன்மைகளை ஒப்பிட்டுக் காட்டும் சில நம்பகமான இணையதளங்களின் மூலம் இந்த சவாலை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளலாம். அவற்றில் ஒரு ஃபண்டின் கடந்தகால செயல்திறன், ரிஸ்க் தகவல், எவ்வளவு காலமாக அது இருந்துள்ளது, அதன் அளவு போன்ற பல அம்சங்களை நீங்கள் பார்க்கலாம். 

ஒரே இடத்தில் பல்வேறு ஸ்கீம்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்து ஒப்பிட www.mutualfundssahihai.com/schemeperformance எனும் இணையதளத்திற்குச் செல்லுங்கள். ஏதேனும் ஒரு வகையின் கீழ் உள்ள, எல்லா ஸ்கீம்களின் ரிட்டர்ன்சையும் பார்க்கலாம், ஸ்கீம்களின் பெஞ்ச்மார்க்குடன் அவற்றின் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்க்கலாம், அதே வகையில் உள்ள அதே போன்ற ஸ்கீம்களுடன் ஒப்பிடுகையில் அது அவ்வளவு நன்றாக செயல்பட்டுள்ளது என்றும் பார்க்கலாம். வரைபடத்தின் உதவியுடன், ஒரு ஃபண்டின் கடந்தகால செயல்திறனை அதன் பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிட்டு அறியலாம், ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் இரண்டுக்கும், பல்வேறு காலகட்டத்தில் அதன் டிராக் ரெக்கார்டை இதன் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

 

 

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?