மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது மிக எளிது. இவை நெகிழ்த்தன்மை கொண்டவை, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையில் ரூ.500 போன்ற குறைந்த தொகையைக் கூட முதலீடு செய்யத் தொடங்க முடியும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய இன்னும் சில வழிகளும் உள்ளன. 

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள்:

  • அருகிலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகம், ISCகள் (இன்வெஸ்ட்டர் சர்வீஸ் சென்டர்கள்) அல்லது RTAகளுக்குச் (ரெஜிஸ்ட்ரார் & டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட்டுகள்) சென்று முதலீடு செய்யலாம். 
  • AMFI-இல் பதிவுசெய்துள்ள ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் முதலீடு செய்யலாம். டிஸ்ட்ரிபியூட்டர் என்பது தனிநபர், வங்கி, புரோக்கர் போன்ற எதுவாகவும் இருக்கலாம். 
  • ஃபண்ட் ஹவுஸ்களின் ஆன்லைன் சேவைகள் அல்லது இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யலாம். 

முதலீட்டாளர்களின் விருப்பத்தேர்வுகளும், அவர்களுக்கு உள்ள திறனும் வேறுபடும் என்பதால், எல்லோருக்கும் ஒரே முறை பொருந்த வாய்ப்பில்லை. ஆனால் இந்த எல்லா முறைகளையும் மொத்தமாக ஆன்லைன், ஆஃப்லைன் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  

a) ஆன்லைன்: ஃபண்ட் ஹவுஸ்களின் இணையதளம் அல்லது ஆன்லைன் சேவைகளின் மூலம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளைத் தொடங்கலாம். 

b) ஆஃப்லைன்: முதலீட்டாளர் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தனக்கு அருகிலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு ஆஃப்லைனில் கணக்கைத் தொடங்கலாம். 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் செயல்முறையை எளிதாக புரிந்து கொள்ளலாம்:

  • ஒரு மியூச்சுவல் ஃபண்ட் சேவை அல்லது ஃபண்ட் ஹவுஸைத் தேர்வுசெய்யுங்கள். 
  • தேர்ந்தெடுத்த சேவையில் உங்கள் விவரங்களை வழங்கிப் பதிவுசெய்துகொள்ளுங்கள். 
  • KYC செயல்முறையை நிறைவுசெய்யுங்கள். 
  • உங்கள் இலக்குகளுக்குப் பொருத்தமான ஃபண்டைத் தேர்வுசெய்யுங்கள், உங்கள் வங்கிக் கணக்கை இணையுங்கள். 
  • முதலீடு செய்ய வேண்டிய தொகையையும் முதலீடு செய்யும் முறையையும் குறிப்பிட்டு முதலீட்டைத் தொடங்குங்கள். 
  • ஃபண்டுக்குப் பணம் அனுப்புங்கள், அவ்வளவுதான். அதன் பிறகு உங்கள் ஃபண்ட் எப்படி வளர்கிறது என்று அடிக்கடிப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய சிறந்த வழி எது என்பது முதலீட்டாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. உதாரணமாக, இணையம், கணினி பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்த ஒரு முதலீட்டாளர் ஆன்லைனில் முதலீடு செய்யவே தேர்வுசெய்வார். 

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

287
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்