ஏதாவது இரண்டு திட்டங்களின் செயல்திறனை எப்படி ஒப்பிடுவது

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நீங்கள் ஒரு கார் வாங்கும்போது, எந்த மாடல் சிறந்தது என்று எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? சமீபத்திய மாடல்கள் எதுவோ அதைத் தேர்வு செய்வீர்களா அல்லது என்ன வகைக் கார் வேண்டும் என்று முதலில் முடிவு செய்வீர்களா? அப்போதும் உறுதியாக முடிவெடுக்க முடியாவிட்டால், ஒரு டீலரிடம் சென்று பேசுவீர்கள் இல்லையா? அப்போது அவர் கேட்கும் முதல் கேள்வி என்னவாக இருக்கும்? உங்களுக்கு எந்த வகைக் கார் வேண்டும்? SUV, ஹாட்ச்பேக், செடான் இவற்றில் எது வாங்க விரும்புகிறீர்கள் என்று தான் கேட்பாரல்லவா? 

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் செயல்திறனை ஒப்பிடும்போதும் அதேபோல் தான். வெவ்வேறு வகையைச் சேர்ந்த இரண்டு ஸ்கீம்களின் செயல்திறனை நீங்கள் ஒப்பிட முடியாது. ஒரே வகையைச் சேர்ந்த ஒரே மாதிரியான முதலீட்டு இலக்குகளையும் அசெட் அலொகேஷனும், பென்ச்மார்க் இன்டெக்ஸும் கொண்டுள்ள ஸ்கீம்களையே ஒப்பிட வேண்டும். SUV-யும் செடானும் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை, ஆகவே அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாது. அது போலவே வெவ்வேறு முதலீட்டு இலக்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கீம்கள் வெவ்வேறு ரிஸ்க் அளவுகளைக் கொண்டிருக்கலாம். எனவே, ஒரே பென்ச்மார்க்கைக் கொண்டுள்ள இரண்டு ஸ்கீம்களை நீங்கள் ஒப்பிடும்போது, அது ஒரே எஞ்சின் சிஸ்டம் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு கார்களின் செயல்திறனை நீங்கள் ஒப்பிடுவது போன்றது. இரண்டு ப்ளூச்சிப் ஃபண்ட்களையோ இரண்டு ஸ்மால் கேப் ஃபண்ட்களையோ ஒப்பிடுவது சரியே. ஆனால் ப்ளூச்சிப் ஃபண்டின் செயல்திறனை ஒரு ஸ்மால் கேப் ஃபண்டின் செயல்திறனுடன் ஒப்பிடக்கூடாது. இரண்டுமே ஈக்விட்டி ஸ்கீம்களாகவே இருந்தாலும் கூட இந்த ஒப்பீடு சரியாக இருக்காது. அதுமட்டுமின்றி, ஒரே வகைக்குள்ளும் ஒரே காலகட்டத்திலான செயல்திறனையே நீங்கள் ஒப்பிட வேண்டும். கார் மைலேஜ் பற்றிப் பார்க்கும்போது நகருக்குள் ஓடும் காரையும் நெடுஞ்சாலையில் ஓடும் காரையும் ஒப்பிடமாட்டீர்கள் அல்லவா, அதே போன்றுதான்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்