இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ரிஸ்க்குகள்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

இன்டெக்ஸ் ஃபண்ட்கள் முனைப்பின்றி நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களாகும். அவை Sensex அல்லது Nifty போன்ற பிரபலமான மார்க்கெட் இன்டெக்ஸை அப்படியே நகலெடுக்கும். முனைப்புடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்களுடன் ஒப்பிட்டால், இன்டெக்ஸ் ஃபண்ட்கள் குறைவான மார்க்கெட் ரிஸ்க் கொண்டவைதான். எனினும் இன்டெக்ஸில் உள்ள எல்லா செக்யூரிட்டிகளையும் ஒரே விகிதத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதால், துல்லியமான மாற்றங்களை (ஷார்ப் கரெக்ஷன்களை) சமாளிக்கும் திறன் ஃபண்ட் மேனேஜருக்குக் குறைவு. இந்த மார்க்கெட் மாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்காக, குறைத்து மதிப்பிடப்பட்ட (அண்டர்வேல்யூ செய்யப்பட்ட) ஸ்டாக்குகளை அவரால் மேலும் வாங்க முடியாது அல்லது உயர்த்தி மதிப்பிடப்பட்ட (ஓவர் வேல்யூ செய்யப்பட்ட) ஸ்டாக்குகளை விற்க முடியாது. 

இன்டெக்ஸ் ஃபண்ட்கள் குறிப்பிட்ட மார்க்கெட் இன்டெக்ஸ்களைக் கண்கணிப்பவை என்பதால், குறிப்பிட்ட மார்க்கெட் பிரிவுக்குள் வரும் நிலைபெற்ற செக்யூரிட்டிகளைக் கொண்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்கும். அது, லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மல்ட்டி கேப், பேங்கிங் ஸ்டாக்குகள், கார்ப்பரேட் பாண்ட்கள் என எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம். இதனால் முதலீட்டாளருக்கு தேர்ந்தெடுக்கும் எல்லை சிறிதாகிறது. 

மார்க்கெட் இன்டெக்ஸை அப்படியே நகலெடுத்து இயக்கினாலும், இந்த ஃபண்ட்கள் கண்காணிப்புப் பிழையின் காரணமாக, மார்க்கெட் இன்டெக்ஸ் கொடுக்கும் அதே ரிட்டர்னைக் கொடுப்பதில்லை.  மார்க்கெட் இன்டெக்ஸ் காம்போசிஷன் மாறும்போது செலவுகளை ஏற்படுத்தாது, உதாரணமாக அதில் ஏதேனும் செக்யூரிட்டிகள் சேர்க்கப்படும்போதோ அகற்றப்படும்போதோ செலவு எதுவும் ஏற்படாது. இன்டெக்ஸ் ஃபண்டைப் பொறுத்தவரை, இன்டெக்ஸைப் போலவே தனது போர்ட்ஃபோலியோவை வைத்துக்கொள்வதற்காக, பரிவர்த்தனைக் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, ஸ்டாக்குகள் அல்லது ஓர் இன்டெக்ஸில் உள்ள தனித்தனி ஸ்டாக்குகள் சில மாற்றங்களுக்கு உள்ளாகும். இதனால், இன்டெக்ஸ் ரிட்டர்னுடன் ஒப்பிடுகையில் இன்டெக்ஸ் ஃபண்டின் ரிட்டர்ன் குறைவாகிறது. 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்