NPS, மியூச்சுவல் ஃபண்ட்கள் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

NPS, மியூச்சுவல் ஃபண்ட்கள் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் அல்லது NPS என்பது, 2004ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய பணி ஓய்வுகால பலனைப் பெறுவதற்கானஒரு ஸ்கீம் ஆகும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஸ்டாக்குகள், பாண்டுகள் அல்லது பிற செக்யூரிட்டிகளைக் கொண்ட ஒரு போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருக்கும் முதலீட்டு வகையாகும், மேலும் இது ஒரு தொழில்முறை ஃபண்ட் மேனேஜரால் நிர்வகிக்கப்படும். 

NPS, மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகிய இந்த இரண்டு வகை முதலீடுகள் பற்றியும் புரிந்துகொள்ளுதல்

NPS: நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) என்பது இந்தியக் குடிமக்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகான வருமானத்தை அளிப்பதற்காக இந்திய அரசாங்கம் தொடங்கிய ஒரு தன்விருப்பத்தின் பேரிலான பணி ஓய்வுத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை தி பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலெப்மெண்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பு ஒழுங்குமுறைப்படுத்துகிறது. இது ஈக்விட்டி, கார்ப்பரேட் டெப்ட், கவர்மெண்ட் டெப்ட், ஆல்டர்நேட்டிவ் அசெட்டுகள் ஆகியவற்றின் கலவையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை அனுமதிக்கின்ற, மார்க்கெட்டுடன் இணைந்த தயாரிப்பாகும். 

டீயர் I, டீயர் II ஆகிய இரண்டு வகை கணக்குகளை NPS வழங்குகிறது. இதில் டீயர் I கணக்கானது முதலீட்டாளருக்கு 60 வயதாகும் வரை லாக் செய்யப்பட்டே இருக்கும். டீயர் II என்பது முதலீட்டாளரின் விருப்பத்திற்குரியது, இந்தக் கணக்கிற்குத் தகுதி பெறுவதற்கு முதலீட்டாளரிடம் டீயர் I கணக்கு இருக்க வேண்டும். டீயர் I கணக்கைப் போல இல்லாமல், டீயர் II கணக்குகளைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கமுடியும். 

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்பது நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு முதலீட்டு வழியாகும் இதில் அமைப்புசாராப் பணியாளர்களும் உள்ளடங்குவர். இது முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட, பணி ஓய்விற்கான சேமிப்புத் திட்டமாகும். NPS ஸ்கீம்களில் செய்யும் முதலீடுகள் ஈக்விட்டி, கார்ப்பரேட் பாண்டுகள், அரசாங்க செக்யூரிட்டிகள் போன்ற பலவிதமான அசெட் வகைகளில் பரவலாக முதலீடு செய்யப்படுகின்றன. இருந்தாலும், நாமாகச் செய்யக்கூடிய தெரிவு1 மற்றும் தானாக செய்யப்படும் தெரிவு2 ஆகிய அசெட் அலொகேஷன் முறைகளின் மூலம் இந்த ஸ்கீம் நெகிழ்த்தன்மையை வழங்குகிறது..

முதலீட்டாளருக்கு 60 வயதாகும் போது NPS கணக்கு முதிர்ச்சியடையும், அப்போது லம்ப்-சம் பேமெண்ட்டாக முதலீட்டாளர் முதிர்ச்சித் தொகையில் 60% எடுக்கமுடியும். மீதம் இருக்கும் 40% அவர் தொடர்ச்சியாகப் பெறும் ஓய்வூதிய வருடத் தொகையாகப் பெற்றுக்கொள்ளலாம். 

மியூச்சுவல் ஃபண்ட்கள்: மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஸ்டாக்குகள், பாண்டுகள், மணி மார்க்கெட் இன்ஸ்ட்ருமென்ட்கள் உள்ளிட்ட டைவர்சிஃபிகேஷன் செய்யப்பட்ட அசட்டுகளின் போர்ட்ஃபோலியோவை வாங்குவதற்காக பல்வேறு முதலீட்டாளரிடமிருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்கின்ற, தொழில்முறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்ற முதலீட்டு வகையாகும். எளிதாகக் கூறினால், இது பலர் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்கின்ற ஒரு முதலீட்டு முறையாகும். இதில் பொதுவான முதலீட்டு நோக்கத்தைக் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.

ஆக்டிவான முதலீடுகள், பேசிவ் முதலீடுகள், ஈக்விட்டி, நிலையான வருமான முதலீடுகள், பேலன்ஸ் செய்யப்பட்ட ஃபண்ட்கள் போன்ற பல்வேறு முதலீட்டு விருப்பங்களை பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் நிறைவேற்றுகின்றன. இதில் ஒவ்வொரு வகை மியூச்சுவல் ஃபண்டிலும் அதற்கே உண்டான சிறப்பு அம்சங்கள், சாத்தியமுள்ள ரிவார்டுகள், அதனோடு கூட வரும் ரிஸ்க்குகள் ஆகியவையும் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்று சொல்வதானால், லாக்-இன் காலம் என்ற கட்டுப்பாட்டை விதிக்காமல் இருப்பதன் மூலம் பல மியூச்சுவல் ஃபண்ட்கள் நெகிழ்த்தன்மையை வழங்குவதைக் கூறலாம். இந்த நெகிழ்த்தன்மையானது, முதலீட்டாளர்கள் தங்களுடைய குறிப்பிட்ட நிதி இலக்குகள், ரிஸ்க் தாங்கும் திறன், முதலீட்டுக் காலவரம்பு ஆகியவற்றுடன் சிறப்பாக ஒத்துப் போகின்ற ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது, இதனால் அவர்கள் தகவலறிந்து, தங்களுக்கேற்ற பிரத்தியேகமான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடிகிறது.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

286
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்