ஒவ்வொரு இலக்கிற்கும் ஒரு திட்டம்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஆம், உங்கள் வாழ்க்கை இலக்குகளைத் திட்டமிடுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உகந்தவை!

• 15-20 வருடங்கள் கழித்து ஓய்வு பெற்ற பின்பு, திரு ராஜ்புத் தனது நகரத்தில் இருந்து வெளியேறி மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

• திருமதி. பட்டேல் அவர்களுக்கு ஓய்வூதிய நலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கு சேமிப்புகள் இருந்தாலும் கூட, தனது வழக்கமான செலவுகளைப் பூர்த்தி செய்வதற்கு தனது முதலீடுகளில் இருந்து வழக்கமான வருமானத்தைப் பெற விரும்புகிறார்.

• தனது வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்ட கணிசமான தொகை திருமதி. சர்மாவிடம் உள்ளது மற்றும் அவர் அதைத் தனது வங்கிக் கணக்கில் வெறுமனே போட்டு வைத்துள்ளார். ஒருசில நாட்கள் கழித்து மட்டுமே அவர் தனது சப்ளையர்களுக்கும் ஊழியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நிஜ வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் தேர்வுகள் உள்ளனவா?

ஆம்! மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!

வெவ்வேறு வகையான முதலீட்டு நோக்கங்களுக்கு வெவ்வேறு வகையான திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வழங்குகிறது. உதாரணத்திற்கு.

- ஓய்வுக் காலத்துக்கான ஒரு நிதித்தொகுப்பை உருவாக்குதல் - நீங்கள் ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு ஃபண்ட்களை கருதலாம்

- குறைந்த அபாயம் கொண்ட வருமானத்தை உருவாக்க விரும்பினால் - நீங்கள் பாண்டு ஃபண்டை கருதலாம்

- அடுத்து எங்கு முதலீடு செய்யலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கும் வரை, அதிகப்படியாக உள்ள உங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் - நீங்கள் லிக்விட் ஃபண்டை கருதலாம்

குறிப்பாக தங்களின் இலக்குகள் குறித்து தெளிவாக உள்ள ஒருவரின் முதலீடுகளைத் திட்டமிடுவதற்கான பல்வேறு வகையான முதலீட்டுத் தேர்வுகளை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வழங்குகிறது.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்