போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷன் மற்றும் அதன் பலன்கள்

போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷன் செய்வதன் பலன்கள் என்னென்ன zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

“உங்களிடம் இருக்கும் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்”.

முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் இடையே சமநிலையை அடைவது மிகவும் முக்கியமானது. டைவர்சிஃபிகேஷன் என்பது இந்த சமநிலையை அடைவதற்கான ஒரு முக்கியமான உத்தியாகும், ஏனெனில் இது உங்கள் முதலீடுகளை வெவ்வேறு அசெட் பிரிவுகள் மற்றும் துறைகளில் பிரித்து முதலீடு செய்து, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ரிஸ்க்கிற்கு நீங்கள் ஆளாவதைக் குறைக்க உதவுகிறது.

இந்தக் கட்டுரையில், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகளுடன் தொடர்புடைய, போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷன் என்றால் என்ன என்பதையும், நீங்கள் கருத்தில் கொண்டுள்ள முதலீட்டில் இருந்து ரிட்டர்னைப் பெற அது எப்படி உதவும் என்பதையும் பார்ப்போம்.

போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷன் என்றால் என்ன?
நீங்கள் சாப்பிட உணவகத்திற்குச் செல்லும்போது, பரிபூரண திருப்திக்காக அனைத்து விதமான ரெசிபிக்களும் உள்ளடங்கிய உணவுத் தொகுப்பையே அடிக்கடி ஆர்டர் செய்வீர்கள். பசியைத் தூண்டும் சூப், உணவு வகைகள், இனிப்புப் பதார்த்தங்கள் மற்றும் சில பானங்கள் ஆகியவற்றை நீங்கள் ஆர்டர் செய்யலாம். இப்படி ஆர்டர் செய்வதால் பல்வேறு சுவைகளையும் விதவிதமான உணவுகளையும் ருசி பார்த்த திருப்தி கிடைக்கும். மேலும், இதில் ஏதேனும் ஒன்றின் சுவை சரியாக இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒன்றின் சுவை நன்றாக இருந்து அதை ஈடுசெய்துவிடும் வாய்ப்பு உள்ளது.

போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷனும் இது போன்றதுதான் என்று புரிந்துகொள்ளலாம். போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷனில் ரிஸ்க்கை ஈடுகட்டி அதிக ரிட்டர்னைப் பெற பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்படும். அதாவது, ரிஸ்க்கைக் குறைத்து அதிகமான ரிட்டர்னைப் பெறுவது. இதில் ஸ்டாக்குகள், பாண்டுகள், கமாடிட்டிகள், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு அசெட் பிரிவுகளிலும் பிற மாற்று முதலீட்டு முறைகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படும். ஈக்விட்டி, டெப்ட் மற்றும் கமாடிட்டிகள் போன்ற பல மார்க்கெட்களில் நேரடியாக வாங்குவதற்குப் பதிலாக, ஒரே மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் மூலம் அனைத்து மார்க்கெட்களிலும் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, மல்டி அசெட் அலகேஷன் ஃபண்டுகள் குறைந்தபட்சம் மூன்று அசெட் பிரிவுகளில் முதலீடு செய்கின்றன, ஒவ்வொரு பிரிவிற்கும் குறைந்தது 10% ஒதுக்கப்படும். இதேபோல், மல்டி-கேப் ஃபண்டுகள் தங்களது முதலீடுகளில் குறைந்தபட்சம் 65% பங்குகளை பல்வேறு துறைகளிலும் மார்க்கெட் பிரிவுகளிலும் உள்ள ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான இன்ஸ்ட்ருமென்ட்டுகளுக்கு ஒதுக்குகின்றன. சிறிய எண்ணிக்கையிலான ஸ்டாக்குகள், துறைகள், பிரிவுகள் போன்றவற்றில் அதிகப்படியான முதலீடுகள் செய்வது தொடர்பான ரிஸ்க்கைக் குறைக்க இந்த டைவர்சிஃபிகேஷன் உதவும்.

மேலும், நீங்கள் வெவ்வேறு இலக்குகளுக்காக வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்டு ஸ்கீம்களில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் குறுகிய கால இலக்குகளுக்காக டெப்ட் ஃபண்டுகளிலும், நீண்ட கால இலக்குகளுக்காக ஈக்விட்டி ஃபண்டுகளிலும், இடைப்பட்ட கால இலக்குகளுக்கு ஹைப்ரிட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டுகள் ஒவ்வொன்றிற்கும் அவற்றுக்கே உரிய பலன்கள் உள்ளன, குறிப்பிட்ட அளவு ரிஸ்க்கும் உள்ளது. நீங்கள் உங்கள் இலக்குகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவுக்கு ஏற்படும் ரிஸ்க்கைக் குறைக்கலாம்.

பல்வேறு மார்க்கெட் பிரிவுகளில் லாபத்தை அடையும் வாய்ப்பையும் டைவர்சிஃபிகேஷன் வழங்குகிறது, இது ரிஸ்க்கைக் குறைத்து அதிக ரிட்டர்னைப் பெற உதவும்

மியூச்சுவல் ஃபண்டுகளிடையே, இயல்பான டைவர்சிஃபிகேஷனை வழங்கும் மியூச்சுவல் ஃபண்டுகளின் சில குறிப்பிட்ட வகைகள் உள்ளன. உதாரணமாக, மல்டி-கேப் ஃபண்டுகள் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறைகளில் உள்ள ஸ்மால்-கேப், மிட்-கேப், லார்ஜ்-கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. மல்டி-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் பல தரப்பட்ட நிறுவன ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய முடியும். அதேபோல, ரிஸ்க்-பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நீங்கள் விரும்பினால், டெப்ட் மற்றும் ஈக்விட்டி முதலீடுகளில் முதலீடு செய்யும் ஒரு ஹைப்ரிட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

எனினும், இலாபம் கிடைப்பதற்கும் இழப்பிற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் டைவர்சிஃபிகேஷன் உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் முதலீட்டு நோக்கங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷனின் பலன்கள் என்னென்ன?

1) ரிஸ்க் மேலாண்மை
உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பிரிக்கும்போது, ஒரு அசெட் பிரிவு சரியாகச் செயல்படவில்லை என்றாலும் மற்றொரு அசெட் பிரிவு உங்களுக்குக் கைகொடுக்கலாம். அசெட்டுகள் அனைத்தும் ஒரே மாதிரியாகச் செயல்படாது, டைவர்சிஃபிகேஷன் உங்கள் ரிஸ்க்கைக் குறைக்க உதவும். உதாரணமாக, ஈக்விட்டிகள் சரியாகச் செயல்படவில்லை எனில், டெப்ட் முதலீடுகள் மற்றும் தங்க முதலீடுகள் பொதுவாக நன்றாகச் செயல்படும். டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பல்வேறு அசெட்டுகளில் முதலீடுகள் செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ள ஒரு போர்ட்ஃபோலியோவில் நீங்கள் முதலீடு செய்தால், ஒட்டுமொத்த ரிஸ்க்கும் ரிட்டர்னும் சமமாக இருக்கும்.

2) மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் பாதுகாப்பு
ஒரு டைவர்ஸ் போர்ட்ஃபோலியோ ஒட்டுமொத்த ரிஸ்க்கையும் குறைக்கிறது. பல்வேறு அசெட் பிரிவுகள் மற்றும் தொழில்துறைகளில் முதலீடு டைவர்சிஃபிகேஷன் செய்யப்படுவதால் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தின் மொத்த பாதிப்பு குறைக்கப்படுகிறது. மார்க்கெட் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது, அசெட்டும் ரிஸ்க்கில் இருக்கும், இதன் காரணமாக குறைந்த ரிஸ்க் உள்ள அசெட்டுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்னைவிட அதிக ரிஸ்க் உள்ள அசெட்டுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன் அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஒரே நிறுவனத்தின் ஈக்விட்டிகள் மற்றும் பாண்டுகளில் நீங்கள் முதலீடு செய்தால், பாண்டுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்னை விட ஈக்விட்டி முதலீடுகளில் கிடைக்கும் ரிட்டர்ன் அதிகமாக இருக்கும். ஈக்விட்டிகளிலும் ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் டெப்ட், ஈக்விட்டி ஆகிய இரண்டையும் சேர்த்திருந்தால், ஒரு அசெட் பிரிவில் இருந்து வரும் அதிகமான ரிட்டர்ன் மற்றொரு அசெட் பிரிவில் உள்ள குறைந்த அல்லது நெகடிவ் ரிட்டர்னை ஈடுசெய்ய வாய்ப்புள்ளது.

3) இலக்குகள்
குறிப்பிட்ட நிதி இலக்குகளை அடைய டைவர்சிஃபிகேஷன் உங்களுக்கு உதவலாம். குறிப்பிட்ட காலம் கழித்து இந்த இலக்குகள் மாறலாம்; அப்போது அவற்றை அடைய மாற்றத்தக்க முதலீட்டு உத்திகள் தேவைப்படலாம். உதாரணமாக, வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்லத் திட்டமிடுவது, பணிஓய்வுக் காலத்திற்காகச் சேமிப்பது, உங்கள் குழந்தையின் கல்லூரிப் படிப்பிற்குச் செலவு செய்வது போன்ற உங்கள் இலக்குகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தேவைப்படலாம், ஒவ்வொரு இலக்கிற்கும் நீங்கள் திட்டமிட முதலீட்டுக் காலம் தேவைப்படலாம். சந்தேகம் இருந்தால், நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

4) நீண்டகாலச் செயல்திறன்
ஒரு சிறந்த டைவர்சிஃபைடு போர்ட்ஃபோலியோ, நீண்டகாலத்தில் ஒரு நிலையான முதலீட்டு அனுபவத்தை உங்களுக்கு வழங்கலாம். அத்துடன் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் நன்றாக நிலைத்தும் நிற்கலாம்.

5) நேரச் சேமிப்பு மற்றும் சௌகரியம்
ஒவ்வொரு முதலீட்டையும் நீங்கள் தனித்தனியாக கண்காணிக்கத் தேவையில்லை என்பதால் டைவர்சிஃபைடு போர்ட்ஃபோலியோ உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். நீங்கள் போர்ட்ஃபோலியோவின் செயல்திறனைக் கண்காணித்து, தேவையான சரிசெய்தல்களை மட்டும் செய்தாலே போதும். தேவைப்பட்டால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரிடம் அடிக்கடி நீங்கள் ஆலோசனை பெறலாம்.

கருத்தில் கொள்ள வேண்டியவை
ரிஸ்க்கை நிர்வகிக்கவும் ரிட்டர்னை அதிகரிக்கவும் விரும்பும் எந்தவொரு முதலீட்டாளருக்கும் போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷன் அவசியம். பொருளாதாரத்தில் பல்வேறு அசெட் பிரிவுகள் மற்றும் துறைகளில் உள்ள வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்வதால் மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்றவற்றின் பாதிப்பைக் குறைத்து, நீண்டகால நிதி இலக்குகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கலாம்.

பொறுப்புதுறப்பு

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பல்வேறு வகைகள் பற்றி AMFI இணையதளத்தில் உள்ள தகவலானது, ஒரு நிதித் தயாரிப்பு வகை என்ற வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. விற்பனைக்காகவோ விளம்பரத்திற்காகவோ வணிக எதிர்பார்ப்பிலோ வழங்கப்படவில்லை.

இதிலுள்ள உள்ளடக்கம், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் தகவல் ஆதாரங்கள், நம்பகமானது என்று நம்பக்கூடிய வகையிலான பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் AMFI உருவாக்கியது. எனினும், அத்தகைய தகவலின் துல்லியத்திற்கு AMFI உத்தரவாதம் அளிக்காது, அந்தத் தகவல் மாறாது என்றும் உறுதியளிக்காது.

இதிலுள்ள உள்ளடக்கமானது, தனிப்பட்ட ஒரு முதலீட்டாளரின் நோக்கங்கள், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வம் அல்லது நிதி சார்ந்த தேவைகள்/சூழல்கள் அல்லது இங்கு விவரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் அவருக்குப் பொருந்தும் தன்மை போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்படவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் இது குறித்து முதலீட்டு ஆலோசனை பெற, தங்களது தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்/நிபுணர்/வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் என்பது டெபாசிட் செய்யும் தயாரிப்பல்ல, இவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது அதன் AMC-இன் பொறுப்பல்ல, மேலும் இவை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, காப்பீடும் வழங்குவதில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்பில் உள்ள முதலீடுகளின் தன்மையின் காரணமாக, அதன் ரிட்டர்ன்கள் அல்லது சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது.

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்