வெறும் ₹ 500 இல் இருந்து தொடங்கலாம்

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வெறும் 500 தொகையில் இருந்து கூட, உங்களால் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீட்டைத் தொடங்க முடியும்!

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் அதிக அளவில் தொகையை முதலீடு செய்வதன் மூலம் நியாயமான ரிட்டர்ன்களை பெற முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாதத்திற்கு குறைந்தது 500-இல் இருந்து கூட உங்களால் முதலீடு செய்ய முடியும். உங்கள் வருமானம் உயர,உயர உங்கள் முதலீட்டையும் படிப்படியாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

வெவ்வேறு ரிட்டர்ன் விகிதங்களில் உங்கள் முதலீடுகள் எவ்வாறு அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்.

Investment

*இது கட்டாயமாக உதாரணத்திற்காக மட்டுமே. அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ரிட்டர்ன்கள் முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையிலானவை மற்றும் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எந்தவித உத்தரவாதமான ரிட்டர்ன் விகிதத்தையும் வழங்காது.

சாமான்ய மனிதர் முதல், பெரிய மனிதர் வரை அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பொருந்தக்கூடியது. சிறு சேமிப்பு மூலம் பெரிய இலக்குக்கை எட்டுவதற்கு மூன்று தாரக மந்திரங்கள் உள்ளன:

A.      ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்கிடுங்கள் - சிறு அளவிலான தொகையைக் கொண்டும்

b.      வழக்கமாக முதலீடு செய்திடுங்கள் - அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும்

c.       நீண்டகாலத்துக்கு முதலீட்டைத் தக்க வைத்திடுங்கள் - உங்கள் முதலீடுகள் வளர்வதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கு

காலப்போக்கில் ஒவ்வொரு வகையான முதலீட்டாளருக்கும்,மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பொருந்தக்கூடிய ஒன்றாக வளர்ந்துள்ளது. குறைந்த அளவிலான முதலீட்டுத் தொகையாக இருந்தாலும், வழக்கமான முதலீடுகளும் ஒழுங்கான அணுகுமுறையும் நீண்டகாலத்தில்,அதிக செல்வத்தை உருவாக்க உதவிடும்.

347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்