SIP கால்குலேட்டர்
உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் முதலீடு:
உங்கள் முதலீட்டின் எதிர்கால மதிப்பு:
பொறுப்புதுறப்பு:
கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
SIPகள் (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்) என்பவை முதலீட்டாளர்கள் லம்ப்சம் மூலதனத் தொகை இல்லாமல் தங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு எளிய முறையாகும். அவற்றின் மூலம் ஒரு முதலீட்டாளர் நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் முறையில் சிறு சிறு தொகைகளை முதலீடு செய்ய முடியும்.
இங்கு, முதலீட்டாளர்கள் பயன்படுத்தக் கூடிய ஆன்லைன் கால்குலேட்டர் மூலம் SIP முதலீட்டுத் தொகையின் தோராயமான ரிட்டர்ன்களைப் புரிந்துகொள்ளலாம்.
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது என்ன?
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) கால்குலேட்டர் என்பது முதலீடு செய்யக்கூடிய ஒருவர் தனது முதலீடுகளின் சாத்தியமான வளர்ச்சியைக் கணிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் கருவியாகும். எதிர்கால ரிட்டர்ன்களுக்கான கணக்கீட்டை அது எளிதாக்குகிறது, இதனால் முதலீட்டாளர்கள் மார்க்கெட் கணிப்புகளை நம்பியிருக்காமல் தெளிவான எண் வடிவ கணிப்புகளைக் கொண்டு தங்கள் முதலீடுகளைத் திட்டமிட முடியும்.
நாமே கணக்கீட்டைச் செய்வது, குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முயற்சிக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கு கடினமாக இருக்கலாம். SIP அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும், அதில் பிழைகளும் ஏற்படலாம்.
கடினமான கணக்கீட்டைத் தானியங்கு முறையில் செய்வதன் மூலம், புதிய முதலீட்டாளர்களும் அனுபவமிக்க முதலீட்டாளர்களும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் உதவுகிறது.
நிதித் திட்டமிடலில் எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரின் பயன்பாடு
சிறிய அளவிலான தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்வதால் நீண்டகால அளவில் அது எப்படிப் பெருகும் என்பதை கணித்து முதலீடு செய்வது சவாலான விஷயமாகும். பின்வருபவற்றின் மூலம் எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் இந்தச் செயலை எளிதாக்குகிறது:
மதிப்பீடுகளை உடனடியாக வழங்குகிறது: மாதாந்திர முதலீடுகளை எதிர்கால கார்ப்பஸ் தொகையின் கணிப்பாக மாற்றுகிறது.
நாமே கணக்கிடும் அவசியத்தைத் தவிர்க்கிறது: கடினமான கணக்கு அல்லது ஸ்ப்ரெட்ஷீட் உபயோகத்தை அவசியம் இல்லாமல் செய்து நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
பல்வேறு சூழ்நிலைகளை ஒப்பிட உதவுகிறது: பல்வேறு முதலீட்டுத் தொகைகள், எதிர்பார்க்கும் ரிட்டர்ன்கள், கால அளவுகளைக் கொண்டு கணக்கிட்டுப் பார்த்து, பலன்கள் எப்படி மாறுகின்றன என்று பார்க்க முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.
இலக்கை அமைக்க உதவுகிறது: பணி ஓய்வுக்காகத் திட்டமிடுதல், கல்விக்காக சேமித்தல், வீடு வாங்குதல் போன்ற பலவேறு இலக்குகளுக்கு ஏற்ப முதலீடுகளைத் திட்டமிட கால்குலேட்டர் உதவுகிறது.
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?
அடிப்படையில், எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் முதலீடுகளின் எதிர்கால மதிப்பைக் கணக்கிட ஒரு குறிப்பிட்ட கணித சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது. அந்தச் சூத்திரம்:
FV = P * (((1 + i)^n – 1) / i) * (1 + i)
இதில்:
- FV என்பது முதலீட்டுக் கால முடிவில் எதிர்கால மதிப்பாகும்.
- P என்பது மாதாந்திர SIP தொகையாகும்.
- i என்பது காலமுறைப்படி (மாதாந்திர அடிப்படையில்) கிடைக்கும் ரிட்டர்ன் விகிதமாகும்.
- n என்பது தவணைகள் அல்லது பங்களிப்புகளின் எண்ணிக்கையாகும்.
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் சூத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல்
கூட்டு வட்டி முறையில் பெருக்கம்: காலப்போக்கில், ஒவ்வொரு மாதம் செலுத்தப்படும் தொகைக்கும் கூட்டு வட்டி முறையில் ரிட்டர்ன் கிடைக்கிறது என்ற அடிப்படையில் இந்தச் சூத்திரம் கணக்கிடுகிறது.
விகித மாற்றம்: பெரும்பாலும் ரிட்டர்ன்கள் வருடாந்திர ரிட்டர்ன்களாகவே குறிப்பிடப்படுவதால், வருடாந்திர விகிதம் மாதாந்திர விகிதமாக மாற்றப்படுகிறது (அதாவது வருடாந்திர விகிதம் 12 ஆல் வகுக்கப்படும்).
அடுக்கு விளைவு: இந்தச் சூத்திரம் கூட்டு வட்டியின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது, அதாவது தொடர்ச்சியாக சிறு தொகையை முதலீடு செய்துவந்தால் அது நீண்ட காலத்தில் பெரிய அளவிலான ரிட்டர்ன்களை வழங்கும் என்பது.
கணக்கீட்டுக்கு உதாரணம்
ஒரு முதலீட்டாளர் வருடத்திற்கு 12% ரிட்டர்ன் கிடைக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் மாதம் ₹5,000 வீதம் 7 வருடங்களுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் கணக்கீட்டின்படி:
மொத்த முதலீடு: 7 வருடங்களில் சுமார் ₹4.20 இலட்சம் முதலீடு செய்யப்படுகிறது.
எதிர்கால மதிப்பு: மொத்த கார்ப்பஸ் தொகை ₹6.60 இலட்சம் வருகிறது, தொடர்ச்சியாக முதலீடு செய்துவந்தால், கூட்டு வட்டியின் உதவியால் நீண்ட காலவாக்கில் அது எப்படிக் கணிசமான பலனைக் கொடுக்கும் என்பதை இது காட்டுகிறது.
SIP வகைகள்: சரியானதைத் தேர்வுசெய்தல்
1. பொதுவான SIP
வரையறை: தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்ப்பதற்காக ஒரு நிலையான தொகை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (வழக்கமாக மாதந்தோறும்) முதலீடு செய்யப்படும்.
இவர்களுக்கு ஏற்றது: அதிக மாற்றங்கள் இல்லாத, ஒழுக்கமான, சௌகரியமான முதலீடுகளை விரும்பும் முதலீட்டாளர்கள்.
நன்மைகள்:● முறையான சேமிப்பை ஊக்குவிக்கிறது
● ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங்கிற்கு உதவுகிறது
● மார்க்கெட் ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கிறது
2. ஸ்டெப்-அப் SIP
வரையறை: ஸ்டெப்-அப் SIP என்பது டாப்-அப் SIP என்றும் அழைக்கப்படும். இதில் முதலீட்டாளர்கள் முன்பே அமைக்கப்பட்ட குறிப்பிட்ட இடைவெளிகளில் (வழக்கமாக வருடந்தோறும்) தங்கள் SIP பங்களிப்பை தானாக அதிகரிக்க முடியும். வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப முதலீட்டையும் அதிகரித்து, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க இது உதவுகிறது.
இவர்களுக்கு ஏற்றது: சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கும், தங்கள் வருமானம் நிலையாக அதிகரிக்கும், அதற்கு ஏற்ப முதலீடும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பும் மற்றவர்களுக்கும் மிகவும் ஏற்றது.
நன்மைகள்:● பணவீக்கத்தை சமாளிக்கிறது
● அதிகம் சம்பாதிக்கும் வருடங்களில் முதலீட்டை அதிகபட்சமாக்குகிறது
● வருமானம் அதிகரிக்கும்போது செல்வத்தைச் சேர்க்க உதவுகிறது
ஸ்டெப்-அப் SIP முறை, குறைந்தபட்ச செயல்பாட்டில், எதிர்காலத்தில் சிறந்த போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதைத் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பலன்தரக்கூடியதாகும். ஏனெனில் உத்தி அடிப்படையில் அது நீண்டகால முதலீடுகளைப் பெருக்குவது மட்டுமல்லாமல், வருமானம் வளர வளர முதலீட்டையும் அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தையும் சமாளிக்கிறது.
3. நெகிழ்த்தன்மை கொண்ட SIP
வரையறை: நெகிழ்த்தன்மை கொண்ட SIP முறையில் மார்க்கெட் அல்லது தனிநபர் வருமானத்தின் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பங்களிப்பின் தொகை மாறும்.
இவர்களுக்கு ஏற்றது: நெகிழ்த்தன்மை கொண்ட SIP முறையில் மார்க்கெட் அல்லது தனிநபர் வருமானத்தின் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பங்களிப்பின் தொகை மாறும்.
நன்மைகள்:
● நிதியியல் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்த்தன்மை கொண்டது
● மார்க்கெட் இறக்கத்தில் இருக்கும்போது அதிகம் முதலீடு செய்ய முடியும்
4. தொடர்ச்சியான SIP
வரையறை: குறிப்பிட்ட கால வரம்பு கிடையாது. முதலீட்டாளர் தனது SIP முதலீட்டை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம்.
இவர்களுக்கு ஏற்றது: நீண்ட காலவாக்கில் முதலீட்டைப் பெருக்க விரும்பும் முதலீட்டாளர்கள்.
நன்மைகள்:
● முதலீட்டை நிறுத்த வேண்டிய அழுத்தம் கிடையாது
● நீண்ட கால நிதி இலக்குகளைக் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது
5. ட்ரிகர் SIP
வரையறை: மார்க்கெட் குறிப்பிட்ட நிலையை அடையும்போது அல்லது நெட் அசெட் வேல்யூ (NAV) அளவு வரும்போது மட்டுமே முதலீடு செய்யப்படும்.
இவர்களுக்கு ஏற்றது: நிச்சயமற்ற மார்க்கெட் சூழ்நிலைகளில் என்ட்ரி பாயிண்ட்டுகளை அதிகபட்சமாக்க விரும்பும் முதலீட்டாளர்கள்.
நன்மைகள்:● விலை ஏற்றப்பட்ட என்ட்ரி பாயிண்ட்டுகளைத் தவிர்ப்பதன் மூலம் சாத்தியமான ரிட்டர்ன்கள் அதிகரிக்கும்
● தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லாமல், மார்க்கெட் டைமிங்கிற்கு ஏற்ப செயல்படும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது
6. மல்டி SIP
வரையறை: ஒரே SIP திட்டத்தின் கீழ் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
இவர்களுக்கு ஏற்றது: பல்வேறு ஃபண்டுகளைக் கொண்ட போர்ட்ஃபோலியோவில் பல்வேறு அசெட்டுகளில் முதலீடு செய்து ரிஸ்க்கை டைவர்சிஃபை செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள்.
நன்மைகள்:● பல முதலீடுகளை எளிதாக நிர்வகிக்க உதவுகிறது
● போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபிகேஷனை மேம்படுத்துகிறது
பல்வேறு ரிஸ்க் புரொஃபைல்கள் மற்றும் நிதி இலக்குகளுக்கு பல்வேறு SIPகள் ஏற்றவையாக இருக்கும். சரியானதைத் தேர்வு செய்வது என்பது, முதலீட்டுக் கால வரம்பு, வருமானத்தின் நிலைத்தன்மை, தனிநபரின் மார்க்கெட் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
SIP மற்றும் லம்ப்சம் முதலீடு: ஓர் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
முதலீட்டைப் பொறுத்தவரை, லம்ப்சம் முறையில் மொத்தமாக முதலீடு செய்வதா அல்லது SIP மூலம் மாதந்தோறும் தவணைகளாக முதலீடு செய்வதா என்று முடிவு செய்வதே ஒரு முதலீட்டாளர் முதலில் எடுக்க வேண்டிய முடிவாகும். இரண்டு முறைகளிலும் நன்மைகள் உள்ளன, ஆனால் எது சிறந்த தேர்வு என்பது மார்க்கெட் நிலவரங்கள் மற்றும் தனிநபரின் நிதி நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.,
பண்பு | SIP | லம்ப்சம் |
---|---|---|
முதலீட்டு வகை | தொடர்ச்சியான, பொதுவாக மாதாந்திர முதலீட்டு முறை கொண்டது, மார்க்கெட் டைமிங் ரிஸ்க்கைக் குறைக்கிறது. | முதலீடு செய்யும் நேரம் சரியாக அமைந்தால், மார்க்கெட் வீழ்ச்சியடைந்திருக்கும் நேரத்தில் ஒரே முறை, முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். |
மார்க்கெட் டைமிங் ரிஸ்க் | ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் ரிஸ்க்கைக் குறைக்கிறது, இதில் ஒரு குறிப்பிட்ட கால அளவு முழுதும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. | குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மொத்தத் தொகையும் மார்க்கெட்டில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அதிகம். |
ரிஸ்க் டைவர்சிஃபிகேஷன் | பல்வேறு மார்க்கெட் சைக்கிள்களில் முதலீடுகள் செய்யப்படுவதால், நீண்டகாலவாக்கில் சிறந்த டைவர்சிஃபிகேஷன் சாத்தியமாகிறது. | தவறான நேரத்தில் முதலீடு செய்யப்பட்டால், டைவர்சிஃபிகேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. |
யாருக்கு ஏற்றது | நீண்டகாலத்தில் செல்வம் பெருக வேண்டும் என்று விரும்புகின்ற, அடிக்கடி முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது. | குறுகிய காலத்தில் சாத்தியமான ரிட்டர்ன்களைப் பெறுவதற்காக அதிக மார்க்கெட் ரிஸ்க்கை ஏற்கத் தயாராக இருக்கின்ற, உபரி பணம் வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது. |
SIP முதலீடுகளில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
SIP முதலீடுகள் பல நன்மைகளைக் கொண்டவையாக இருந்தாலும், தங்கள் நீண்டகால செல்வ உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில தவறுகளைப் பற்றி முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மார்க்கெட் விழும்போது SIP முதலீடுகளை நிறுத்தி வைத்தல்:
சில முதலீட்டாளர்கள் மார்க்கெட் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் சமயங்களில் குறுகிய கால இழப்புகளுக்கு பயந்து தங்கள் SIP முதலீடுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்வதுண்டு.
இந்தத் தவறைத் தவிர்க்க:
மார்க்கெட் விழும்போதும் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருங்கள். இது போன்ற நிலைகள் பொதுவாக தற்காலிகமானவை, இந்த சமயங்களில் SIPகளை நிறுத்தி வைப்பது, மார்க்கெட் மீண்டு வரும்போது வாய்ப்புகளைத் தவறவிட வழிவகுக்கலாம். இந்த சமயத்தில் SIPகளைத் தொடர்வது, குறைந்த NAVகளால் லாபம் கிடைக்க உதவி, நீண்டகால வளர்ச்சிக்கு உதவுகிறது.
நாட்கள் செல்லச் செல்ல பங்களிப்பை அதிகரிக்க மறந்துவிடுவது:
வருமானம் அதிகரிக்கும்போது முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்கத் தவறுவதால், செல்வத்தின் வளர்ச்சி குறையலாம்.
இந்தத் தவறைத் தவிர்க்க:
ஸ்டெப்-அப் SIP-ஐப் பயன்படுத்துங்கள், இது வருமானம் அதிகரிக்கும்போது உங்கள் முதலீட்டையும் தானாகவே அதிகரிக்கும், இது பணவீக்கத்தை நீங்கள் வெல்ல உதவியாக இருக்கும்.
குறிப்பிட்ட இலக்கில்லாமல் முதலீடு செய்தல்:
மனதில் தோன்றும் வகையில் அல்லது எந்தவொரு தெளிவான இலக்கும் இல்லாமல் முதலீடு செய்வது, பொருத்தமற்ற நிதி விளைவுகளை வழங்கலாம்.
இந்தத் தவறைத் தவிர்க்க:
வரையறுக்கப்பட்ட நிதி இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். பணி ஒய்வு, குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குவது இப்படி ஏதேனும் இருக்கலாம். இது உங்கள் SIP உத்தியுடன் பொருந்தும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஃபண்ட் எப்படிச் செயல்படுகிறது என்பதை கவனிக்காமல் விடுவது:
சில முதலீட்டாளர்கள், பெரும்பாலும் ஒரு ஃபண்ட் நீண்ட காலவாக்கில் எப்படிச் செயல்படுகிறது என்று ஆய்வு செய்யாமலே முதலீடு செய்து வைத்திருப்பார்கள்.
இந்தத் தவறைத் தவிர்க்க:
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் ஃபண்டின் செயல்திறனை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப உங்கள் போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்து, உங்கள் நிதி இலக்குகளுக்குப் பொருத்தமாக இருக்கும்படி மாற்றங்களைச் செய்யுங்கள்.
SIP ரிட்டர்ன் ஏற்ற இறக்கங்கள்: அவற்றைப் புரிந்துகொள்ளுதல்
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர்கள் பயனுள்ள மதிப்பீடுகளை வழங்குகின்றன என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்கள் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தால் பாதிப்படைபவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். SIP ரிட்டர்ன்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதற்கான காரணங்கள்:
SIP ரிட்டர்ன்களை பாதிக்கும் விஷயங்கள்
- மார்க்கெட்டின் ஏற்ற இறக்கம்: குறுகிய கால மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள் ரிட்டர்ன்களை பாதிக்கலாம், ஆனால் நீண்ட காலவாக்கில் பொதுவாக அது ஏறிக்கொண்டே தான் இருக்கும்.
- பொருளாதார சூழ்நிலைகள்: பணவீக்கம், வட்டி விகிதங்கள், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறனை பாதிக்கும்.
- ஃபண்ட் நிர்வாகம் மற்றும் செயல்திறன்: ஃபண்ட் மேனேஜரின் திறமையும் செயல்படும் பாணியும் ஃபண்டின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியமான விஷயங்களாகும்.
- நடைமுறைக் குறிப்புகள்
- நீண்ட காலச் செயல்பாடு முக்கியம்: மாதாந்திர ரிட்டர்ன்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், நீண்ட கால முதலீடுகள் பொதுவாக அந்த ஏற்ற இறக்கங்களை விஞ்சி பலன் தரக்கூடியவையாக இருக்கும்.
- தொடர்ந்து கண்காணிப்பது மிக முக்கியம்: முதலிட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது ஆய்வு செய்து, பெரிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
இது பொருளாதாரச் சூழல்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட உங்களுக்கு உதவுகிறது, யதார்த்தமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள உதவுகிறது, நீண்ட முதலீட்டுக் கால வரம்பின் அவசியத்தை நினைவூட்டுகிறது.
SIPகளில் முதலீட்டு இலக்கை அமைத்தல்
1. பணி ஓய்வுக்குத் திட்டமிடுதல்
இலக்கு: பணி ஓய்வுக்குப் பிறகான உங்கள் வாழ்க்கை முறைக்கு உதவிடும் வகையில் வலுவான நிதி ஆதாரத்தை உருவாக்கிடுங்கள்.
முறை: கூட்டு வட்டியின் ஆற்றலைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் நம்பகமான சேமிப்பை உருவாக்க, பல வருடங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்துகொண்டு வாருங்கள்.
வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் சமநிலை இருக்கும் வகையில், ஈக்விட்டி ஃபண்டுகள் டெப்ட் ஃபண்டுகள் ஆகிய இரண்டு வகையிலும் முதலீடு செய்யுங்கள்.
2. குழந்தைகளின் கல்வி
இலக்கு: எதிர்காலக் கல்விச் செலவுகளுக்காக போதுமான பணத்தைச் சேமித்திடுங்கள்.
அணுகுமுறை: Begin early to gain through compounding fully.
Align the investment horizon with your child's college joining age.
3. Wealth Building
இலக்கு: Achieve long-term financial independence through systematic investing.
அணுகுமுறை: படிப்படியாக அதிகரிக்கும் சிறு இலக்குகளை அமைத்திடுங்கள்.
தொடந்து முறையாக உங்கள் போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்து மார்க்கெட் தேவைகளுக்கு ஏற்ப ரீபேலன்ஸ் செய்யுங்கள்.
4. வீடு வாங்குதல்
இலக்கு: எதிர்காலத்தில் வீடு வாங்குவதற்கான முன்பணத்தைத் திரட்டுதல்.
முறை: தகுந்த தொடக்க விகிதத்தில் மாதாந்திர முதலீட்டைத் தொடங்குங்கள்.
உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப முதலீடுகளை மாற்றுவதைப் பற்றிப் புரிந்துகொள்ள எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஏற்ப SIP முதலீடுகளை அமைத்துவிட்டால், பணத்தை சேமித்து, நீண்ட காலவாக்கில் செல்வம் சேர்க்கின்ற பிரத்தியேகமான நிதித் திட்டத்தை அடைந்துவிடலாம்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது
உங்கள் முதலீட்டுத் திட்டத்தை உருவாக்க எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது, செயல்திறன் மிக்கது. தொடங்குவதற்கு இந்த எளிய படிகளைப் பின்பற்றுங்கள்:
உங்கள் மாதாந்திர SIP தொகையை உள்ளிடுங்கள்:
நீங்கள் மாதந்தோறும் முதலீடு செய்ய விரும்பும் நிலையான தொகையை உள்ளிடுங்கள்.
எதிர்பார்க்கப்படும் வருடாந்திர ரிட்டர்ன் விகிதத்தை உள்ளிடுங்கள்:
ஈக்விட்டி ஃபண்டுகள் அவற்றின் கடந்தகாலப் போக்குகளின் அடிப்படையில், நீண்ட காலவாக்கில் அதிக ரிட்டர்ன்களை வழங்கும் சாத்தியமுள்ளவை.
உங்கள் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் விருப்பம், தேர்ந்தெடுக்கும் ஃபண்டின் வகை ஆகியவற்றுக்கு ஏற்ப நீங்கள் எதிர்பார்க்கப்படும் விகிதத்தை மாற்றிக்கொள்ளலாம்.
முதலீட்டுக் கால அளவைத் தேர்வுசெய்யவும்:
எவ்வளவு காலம் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். சில வருடங்களாகவோ இருபது அல்லது முப்பது வருடங்களாகவோ கூட இருக்கலாம். உடனடியாக மதிப்பீட்டைப் பாருங்கள்
நீங்கள் வழங்கிய மதிப்புகளுக்கு ஏற்ப, எதிர்கால கார்ப்பஸ் தொகை எவ்வளவு வரும் என்று கால்குலேட்டர் காண்பிக்கும்.
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது வெறும் எண் கணிதத்தைச் செய்யும் கால்குலேட்டர் மட்டுமல்ல, அது உங்கள் முதலீட்டு ஒழுக்கத்தையும் நிதித் திட்டமிடலையும் மேம்படுத்த உதவும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
- துல்லியமான மதிப்பீடுகள் உடனடியாக: எந்தக் கணக்கீடும் நீங்கள் செய்யாமலே மதிப்பீடுகளை உடனடியாகப் பெறலாம், உங்கள் நேரமும் மிச்சமாகும், சிரமமும் கிடையாது.
- சிறந்த முதலீட்டுத் திட்டமிடல்: குறிப்பிட்ட நிதி இலக்குகளை அடைவதற்கான, சரியான SIP தொகையைத் தீர்மானிக்க உதவுகிறது.
- சூழ்நிலைகளை ஆய்வு செய்தல்: முதலீடு செய்யும் தொகை, எதிர்பார்க்கும் ரிட்டர்ன், கால அளவு போன்ற மதிப்புகளை மாற்றுவதன் மூலம், பல்வேறு சூழல்களை ஒப்பிட முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.
- பிழைகளைக் குறைக்கிறது: நாமே கணக்கிடும்போது ஏற்படும் பிழைகள், தானியங்குக் கணக்கீடுகளில் குறைவு.
- பயனர் தோழமையானது எளிதாகப் பயன்படுத்தக்கூடியது: ஆன்லைன் எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர்கள் பெரும்பாலும் இலவசமானவை, அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும், புதிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி அனுபவமிக்க முதலீட்டாளர்களுக்கும் அவை அவசியமான கருவியாகும்.
பொதுவான கேள்விகள்
கே1. எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது என்ன?
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் என்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து நீங்கள் செய்யும் முதலீடுகளின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டின் எதிர்கால மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று மதிப்பீடு செய்யக்கூடிய ஆன்லைன் கருவியாகும். ரிட்டர்ன்களைக் கணக்கிட அது கூட்டு வட்டி சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது.
கே2. எனது முதலீடுகளைப் பற்றி முடிவு செய்யும்போது நான் வெறும் எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமா?
தோராயமான கணிப்பைத் தெரிந்துகொள்ள எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் சிறப்பாக உதவும் என்றாலும், மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள், பொதுவான பொருளாதாரா நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையான ரிட்டர்ன்கள் மாறக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திட்டமிடுவதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்த வேண்டும், உத்தரவாதமளிக்கும் முன் கணிப்புக் கருவியாக அல்ல.
கே3. SIP ரிட்டர்ன்களை பாதிக்கக்கூடிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
- ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யப்படும் தொகை
- எதிர்பார்க்கும் ரிட்டர்ன் விகிதம்
- முதலீட்டுக் கால அளவு
- மார்க்கெட் நிலைமைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள்
கே4. SIPகள் எல்லோருக்கும் ஏற்றவையா?
குறிப்பாக, செல்வத்தைப் பெருக்குவதற்காக நீண்டகால அணுகுமுறைப்படி, முறையாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு SIPகள் உதவிகரமாக இருக்கும். தொடர்ச்சியான வருமானமுள்ளவர்களுக்கு இவை மிகவும் ஏற்றவை, ஆனால் உபரிப் பணம் வைத்திருப்பவர்களும் மார்க்கெட் கீழிறங்கி இருக்கும் சமயங்களில் லம்ப்சம் முதலீடு செய்யலாம்.
கே5. SIP முதலீட்டில் வரிச்சலுகை என்ன உள்ளது?
ஈக்விட்டி-லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம்களில் (ELSS) செய்யும் முதலீடுகளை பிரிவு 80C-இன் கீழ் கிளைம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்டகால முதலீட்டில் பெரும் கேப்பிட்டல் கெயினுக்கு விதிக்கப்படும் வரி விகிதம் ஒப்பீட்டில் குறைவு.
கே6. என் SIP முதலீடுகளை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை நான் ஆய்வு செய்ய வேண்டும்?
குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும், ஆனால் மார்க்கெட்டில் திடீர் மாற்றங்களைக் கவனித்தால் இன்னும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
இறுதிக் கருத்து
நிதி இலக்குகளை அடைவதற்கு நல்ல முதலீட்டுத் திட்டம் அவசியமாகும்.
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் சிக்கலான கணக்கீடுகளை எளிதாக்கி, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் சாத்தியமான வளர்ச்சியைக் கண்முன் பார்க்க உதவுகின்ற ஒரு சிறந்த கருவியாகும்.
நீங்கள் பணி ஓய்வுக்குத் திட்டமிடலாம், பெரிய பர்ச்சேஸ் ஏதேனும் செய்யப் பணம் சேர்க்கலாம், நீண்ட காலவாக்கில் செல்வத்தைச் சேர்க்க விரும்பலாம், உங்கள் நோக்கம் இதுபோன்ற எதுவாக இருந்தாலும், ஒரு எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் உங்கள் திட்டமிடும் செயலை இன்னும் சிறப்பாக்கும்.