வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கட்டுரைகள், குறிப்பிட்ட நீண்டகால இலக்குகளை அடைவதற்கு திட்டமிடுவதற்காகவே எழுதப்படுகின்றன. இதிலிருந்து பிற இலக்குகளை, இன்னும் குறிப்பாக பிற குறுகியகால இலக்குகளை அடைய முடியாது என்று முதலீட்டாளர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர்.
ஓர் உதாரணத்தின் மூலம் இது ஒரு கட்டுக்கதை என்பதை புரிந்துகொள்ளலாம்.
பயணத்தை விரும்பும் நபரான ரமேஷுக்கு அவரின் நிறுவனம் போனஸ் வழங்குகிறது.
அந்த போனஸ் தொகையை வைத்து ரமேஷ் ஐரோப்பா செல்ல விரும்புகிறார். ஆனால், அவர் வேலை செய்கின்ற பெரிய புராஜெக்ட்டின் கெடு தேதி நெருங்கி வருகிறது. அடுத்த எட்டு மாதங்களில் புராஜெக்ட் முடிந்துவிடும்.
ரமேஷின் பயணத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை அவரின் செலவுகளைப் பார்க்கும் போது, பயணத்தின் போதும், பயணத்துக்கு முன்பும் குறிப்பிட்ட அளவிலான தொகையை அவர் செலவிட வேண்டும். தேதி உறுதியாகத் தெரியாததால், அன்றைய நாளில் எவ்வளவு செலவு ஏற்படும் என்பதை நிச்சயமாகக் கணிக்க முடியவில்லை.
இதுபோன்ற சூழல்களில் சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உகந்ததாக இருக்கும்.
இந்த சேமிப்புகளை, லிக்விட் ஃபண்ட்களில் ரமேஷ் முதலீடு செய்து, தேவையான போது எடுத்துக் கொள்வது சரியானதாக இருக்கும். பணத்தை எடுப்பதற்கு கோரப்பட்ட அடுத்த நாளன்று அவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். SMS அல்லது ஆப் பயன்பாடு மூலம் ரமேஷ் பணமெடுப்பதற்கான கோரிக்கையைச் செய்யமுடியும்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் குறுகிய கால இலக்குகளுக்காக திட்டமிடுவது வசதியானதாக இருக்கும்.