பயன்பாட்டு மற்றும் தனியுரிமை அறிக்கையின் விதிமுறைகள்

www.mutualfundssahihai.com. -க்கு வருகை தந்ததற்கு நன்றி. நாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம் மற்றும் அதை எங்கள் சேவையின் முக்கிய அம்சமாகக் கருதுகிறோம். எங்கள் தனியுரிமைக் கொள்கை நேரடியானது: நீங்கள் எங்கள் இணையதளத்திற்கு வருகை தரும்போது எங்களிடம் நீங்கள் தன்னார்வமாகப் பகிர விரும்பினாலொழிய, உங்களைப் பற்றிய தனியுரிமைத் தகவல்களை நாங்கள் சேகரிக்க மாட்டோம்.

எங்கள் இணையதளத்தை நீங்கள் வெறுமனே பார்வையிட்டாலோ, பக்கங்களைப் வாசித்தாலோ அல்லது தகவலைப் பதிவிறக்கினாலோ, தானாகவே உங்கள் வருகை குறித்த சில தகவல்களை சேகரித்து சேமித்து வைக்கிறோம். இந்தத் தகவலில் இருந்து நீங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணப்பட மாட்டீர்கள் மற்றும் அடையாளம் காண முடியாது. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரின் வகை (உதாரணத்திற்கு, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர்ஃபாக்ஸ் போன்ற), நீங்கள் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் (உதாரணத்திற்கு, விண்டோஸ் அல்லது மேக் OS) மற்றும் உங்கள் இணைய சேவை வழங்குநரின் டொமைன் பெயர், நீங்கள் வருகையை மேற்கொண்ட தேதி மற்றும் நேரம் மற்றும் நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள் உள்பட சிலவகையான தகவல்கள் தானாகவே சேகரிக்கப்படும். இந்த தனிப்பட்டதல்லாத வகையில் அடையாளம் காணக்கூடிய தகவலை, எங்களின் இணையதள(ங்களின்) வடிவமைப்பு, உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் முக்கியமாக உங்களுக்கு சிறந்த பிரவுசிங் அனுபவத்தை வழங்குவதற்காகவும் சிலநேரங்களில் பயன்படுத்திடுவோம்"

குக்கீகள் கொள்கை

இந்த தளத்தில் ""குக்கீகளை"" பயன்படுத்துகிறோம். இருப்பினும், குக்கீயின் பயன்பாடு எங்கள் தளத்துக்கு எந்த தனிப்பட்ட தகவலையும் வெளிப்படுத்தாது. குக்கீ என்பது இணையதள வருகையாளரின் கணினி வன்பொருளில் சேமிக்கப்படும் தரவின் ஒரு சிறு பகுதியாகும். மேலும் இது இணையதள வருகையாளர் ஏற்கனவே பார்வையிட்ட இணையதளங்களின் அணுகலை மேம்படுத்திட உதவிடும். பிரவுசிங் தகவலை அடையாளம் காண்பதற்கு குக்கீகள் உதவுகின்றன.

நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டால், இந்த குக்கீகளின் மூலம் உங்கள் கணினியில் தகவல் சேமிக்கப்படும் மற்றும் இது நீங்கள் அடுத்த முறை எங்கள் முகப்புப் பக்கத்திற்கு வருகை தரும்போது நாங்கள் உங்கள் கணினியைத் தன்னியக்கமாக அடையாளம் காண்பதற்கு உதவிடும். இது உங்கள் பிரவுசிங் அனுபவத்தை நாங்கள் மேம்படுத்துவதற்கு எங்களுக்கு உதவிடும்.

எங்கள் இணையதளம் உங்கள் கணினியில் குக்கீகளை வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை என்றால், குக்கீகளை நீக்கும் வகையில் அல்லது குக்கீகளை தடுக்கும் வகையில் அல்லது குக்கீகளை பயன்படுத்தும் இணையதளங்களை அடையாளம் காண உங்களுக்கு உதவும் வகையில் உங்கள் இன்டர்நெட் பிரவுசரை அமைத்துக் கொள்ளுங்கள்.