மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று ஏன் பொறுப்புத்துறப்பு கூறுகிறது?

அப்படியானால், எதனால் மியூச்சுவல் ஃபண்ட்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை என்று பொறுப்புத்துறப்பில் கூறப்படுகிறது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் மற்றும் அந்த செக்யூரிட்டிகளின் இயல்பு திட்டத்தின் நோக்கத்தைச் சார்ந்து இருக்கும்.

உதாரணத்திற்கு, ஈக்விட்டி அல்லது குரோத் ஃபண்ட்ஸ் திட்டங்கள்,நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். லிக்விட் ஃபண்ட்கள், டெபாசிட் சான்றிதழ்கள் மற்றும் கமர்ஷியல் பேப்பர்களில் முதலீடு செய்யும்.

இருந்தாலும், இந்த எல்லா செக்யூரிட்டிகளுமே ‘சந்தையில்’ டிரேட் செய்யப்படுகின்றன. கேப்பிடல் சந்தையில் வெளியிடப்படும் நிறுவனப் பங்குகள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வாங்கி, விற்கப்படுகின்றன. அதேபோன்று, அரசாங்கப் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் ஆவணங்களை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலமோ அல்லது NDS எனப்படும் பிரத்யேக அமைப்புகளின் மூலமோ வர்த்தகம் செய்ய முடியும். இவை செக்யூரிட்டிகளை வாங்கி விற்கின்ற சந்தையாக உள்ளது மற்றும் பரந்த அளவிலான வாங்குநர்களையும் விற்பனையாளர்களையும் கொண்டது. எனவே, வாங்கி விற்கின்ற முழுச் செயல்முறையும், விலை தீர்மானமும் ‘சந்தையின்’ மூலம் செய்யப்படுகிறது.

எந்தவொரு செக்யூரிட்டியின் விலையும் ‘சந்தை விசைகளை’ சார்ந்தே இருக்கும் மற்றும் எந்தவொரு செய்தி அல்லது வளர்ச்சியானது சந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதன் திசையைக் கணிப்பது என்பது கடினமானது மற்றும் குறுகிய காலத்தில் ஒரு பங்கு அல்லது செக்யூரிட்டியின் விலையை கணிப்பது என்பது சாத்தியமில்லை. பல்வேறு காரணிகளும், பிளேயர்களும் சந்தையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, ‘சந்தை’ என்று அறியப்படுகின்ற முக்கியமான அமைப்பில் இருந்து செக்யூரிட்டிகளின் மீது ஒரு குறிப்பிட்ட ரிஸ்க் எப்போதுமே உள்ளது என்பதை ஒவ்வொரு முதலீட்டாளரும் அறியவேண்டும். அதுமட்டுமல்லாது, முடிந்தவரை ரிஸ்க்கை குறைக்கும் வகையிலேயே மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் அறிய வேண்டும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்