மியூச்சுவல் ஃபண்ட் செயல்திறனைக் காண்பதற்கு ஏதேனும் டாஷ்போர்டு உள்ளதா?

Video
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீடுகளைப் பற்றி யோசிக்கும்போதே எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்று கேட்பது இயல்பு தான். ஃபிக்ஸட் டெப்பாசிட் அல்லது பிற வழக்கமான சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை இதற்கு நேரடியாக பதில் சொல்லிவிடலாம், ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களைப் பொறுத்தவரை அப்படியல்ல. வழக்கமான சேமிப்புத் திட்டங்கள், ஒரு குறிப்பிட்ட வட்டி விகித இலாபத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும். அது நமக்குத் தெரிந்ததே. அதனால் எந்தத் திட்டத்தில் சேமிப்பது எனத் தேர்வு செய்வது எளிதான காரியம். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்களைப் பொறுத்தவரை, தேர்வுசெய்வதற்கு நூற்றுக்கணக்கான ஸ்கீம்கள் இருக்கும், அவை எல்லாவற்றைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க சாத்தியமில்லை எனும்போது முடிவெடுப்பது கடினமாகத் தோன்றலாம்.

இந்த இடத்தில்தான் செயல்திறன் டாஷ்போர்டு நமக்கு உதவுகிறது. ஃபண்ட் செயல்திறன் டாஷ்போர்டு என்பது இந்த எல்லா ஃபண்ட்களுக்கும் ரிப்போர்ட் கார்டு போன்றது. அதில் ஃபண்ட்களுக்குரிய பென்ச்மார்க் மதிப்புகளுடன் ஒப்பிட்டு அவற்றின் கடந்தகால செயல்திறனைப் பார்க்கலாம், சமீபத்திய NAV, தினசரி AUM என அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு தெரிந்துகொள்ளலாம். இப்படியான ஒரு டாஷ்போர்டு செயல்திறனை ஒப்பிடுவதை எளிதாக்கும். ஆனால் இதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்கள் முதலீடுகளுக்கான சரியான ஃபண்டைத் தேர்வுசெய்வதற்கு, ஃபண்டின் வகை, ஃபண்டின் முதலீட்டு இலக்கு, அதன் ரிஸ்க் அளவு, உங்கள் ரிஸ்க் தயார்நிலைக்கும் நிதி இலக்குகளுக்கும் பொருத்தமாக உள்ளதா என்பது போன்ற பல்வேறு அம்சங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

எனினும், அடுத்தமுறை ஃபண்ட்களின் செயல்திறன்களை ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் விரும்பும்போது, எல்லா ஃபண்ட்களின் செயல்திறன் போக்குகளையும் ஒரே இடத்தில் காண, www.mutualfundssahihai.com தளத்திற்குச் சென்று ‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களின் செயல்திறனை அறிந்திடுங்கள்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்