டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்கைப் புரிந்துகொள்ளுதல்

டெப்ட்ஃபண்ட்களுடன் தொடர்புடைய ரிஸ்க்குகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு உரிமையாளரான உங்கள் நண்பர் ஒருவருக்கு, 8% வட்டியில் 5 இலட்ச ரூபாய் தொகையை கடனாகக் கொடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் (இது நடப்பு வங்கி வட்டியான 7%-ஐ விட அதிகம்). பலவருடங்களாக நீங்கள் அவரை அறிந்திருந்தாலும்கூட , அவர் உங்கள் பணத்தை உரிய நேரத்தில் திரும்பத் தராமல் போவது அல்லது ஒட்டுமொத்தமாக திரும்பத் தராமல் போகக்கூடிய ரிஸ்க் உங்களுக்கு இருக்கிறது. மேலும், நீங்கள் 8% வட்டியில் கடன் கொடுத்திருக்கும் நிலையில், வங்கி வட்டி வீதம் 8.5% அளவுக்கு அதிகரிக்கலாம்.

அதேபோன்று, டெப்ட்ஃபண்ட்கள் (டெப்ட் ஃபண்ட்கள்) உங்கள் பணத்தை பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் போன்ற வட்டியைத் தாங்கி வருகின்ற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும். இந்த ஃபண்டுகளுக்கு முறைப்படி வட்டித் தொகையை வழங்குவதற்கு இந்த செக்யூரிட்டிகள் உத்தரவாதம் அளித்திடும். எனவே, நீங்கள் உங்கள் நண்பருக்கு பணத்தைக் கடனாகக் கொடுக்கும் போது எதிர்கொள்ளும் மூன்று முக்கிய ரிஸ்க்குகள் இந்த டெப்ட் ஃபண்ட்களிலும் உள்ளன.

  • முதலில், வட்டியைத் தாங்கி வருகின்ற செக்யூரிட்டிகளில் இந்த ஃபண்ட்கள் முதலீடு செய்வதால், வட்டி வீதங்கள் மாறும்போது அவற்றின் NAVகளும் மாறும் (வட்டி வீத ரிஸ்க்). வட்டி வீதங்கள் அதிகரிக்கும் போது இந்த ஃபண்ட்களின் விலைகள் குறையும் மற்றும் வட்டி வீதங்கள் குறையும் போது இந்த ஃபண்டுகளின் விலைகள் அதிகரிக்கும்.
  • இரண்டாவதாக இந்த ஃபண்ட்கள், கிரெடிட் ரிஸ்க்கால் பாதிக்கப்படுபவை. அதாவது, அவை முதலீடு செய்துள்ள செக்யூரிட்டிகளில் (எ.கா. பாண்டுகள்) இருந்து முறைப்படியான பணத்தை திரும்ப பெறாமல் போகக்கூடிய ரிஸ்க் இதில் அடங்கியுள்ளது.
  • மிக மோசமான சூழலில், பாண்டு வழங்குனர், வாக்குறுதி அளித்த பணத்தை திரும்ப தராமல் போகக்கூடிய, ரிஸ்க்கை இந்த ஃபண்ட்கள் எதிர்கொள்ளக் கூடும். டெப்ட் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டு பணத்தைத் திரும்பத் தராமல் போகும் போது, இது ஃபண்டின் வட்டி வருவாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக உங்கள் ஃபண்டின் ஒட்டுமொத்த ரிட்டர்னை பாதிக்கும்.

 

 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்