டார்க்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்னென்ன?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

கடந்த சில ஆண்டுகளில் வரி தொடர்பான கூடுதல் லாபங்களுக்காக, முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற பாரம்பரிய சேமிப்புத் தயாரிப்புகளில் இருந்து டெப்ட் ஃபண்ட்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். எனினும், இவ்வாறு மாறும்போது ரிட்டர்ன்ஸ் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அசலை இழப்பது போன்ற விஷயங்கள் முக்கிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் (TMF) என்பவை FMP உட்பட பிற டெப்ட் ஃபண்ட்களைவிட அதிக நன்மைகளை அளிக்கின்ற பேசிவ் வகை டெப்ட் ஃபண்ட்களாகும்.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, இந்த வகை டெப்ட் ஃபண்ட்களின் தனித்துவமான அம்சம் என்ன என்று பார்ப்போம். டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களுக்கு குறிப்பிட்ட முதிர்ச்சித் தேதி உள்ளது, அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளின் காலாவதித் தேதியானது இந்த முதிர்ச்சித் தேதியுடன் ஒத்திருக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், காலம் அதிகரிக்க அதிகரிக்க ஃபண்டின் முதிர்ச்சிக்கான காலம் குறைந்துகொண்டே செல்கிறது. அதோடு, போர்ட்ஃபோலியோவில் இருக்கும் அனைத்து பாண்டுகளும் முதிர்ச்சி வரை தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.

மற்றவற்றுடன் ஒப்பிடும்போது, வட்டி விகித மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் தன்மையே TMF ஃபண்ட்களின் முதல் மற்றும் சிறந்த நன்மையாகும். முதிர்ச்சி வரை போர்ட்ஃபோலியோ தக்கவைக்கப்படுவதால், முதலீட்டுக் காலம் முழுவதும் வட்டி விகித மாற்றங்களால் இவை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, போர்ட்ஃபோலியோ பாண்டுகள் முதிர்ச்சி வரை வைத்துக்கொள்ளப்படுவதால், மற்ற டெப்ட் ஃபண்ட்களைவிட TMF ஃபண்ட்களின் ரிட்டர்ன்ஸ் எப்போதும் தெரிந்த வண்ணமே உள்ளது. இதனால், எந்த நேரமும் ரிட்டர்ன் குறித்த எதிர்பார்ப்புகள் ஃபண்டின் முதிர்ச்சியின் போதான பலன் (யீல்டு-டு-மெச்சூரிட்டி (YTM)) மதிப்புடன் ஒத்துப்போகும் வகையில் இருக்கின்றன. மூன்றாவதாக, பேசிவ் பண்பு கொண்டதாக இருப்பதால், டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ஃபண்ட்கள், அவற்றிலுள்ள ஃபண்ட்களை அவற்றின் அடிப்படையாக அமைந்துள்ள பாண்டு இன்டெக்ஸுக்கு ஏற்ப முதலீடு செய்து வைக்கின்றன. இதனால், இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் பெரும்பகுதி இந்தியாவின் பாண்டு இன்டெக்ஸ்களில் பெருபான்மை வகிக்கின்ற அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது, டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் அரசாங்க பாண்டுகள், PSU பாண்டுகள், ஸ்டேட் டெவலப்மென்ட் லோன்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், பிற டெப்ட் ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் TMF ஃபண்ட்களின் இயல்பு மற்றும் கிரெடிட் ரிஸ்க் குறைவாக உள்ளது.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் ஓப்பன் எண்டட் ஃபண்ட்களாக இருப்பதாலும், இன்டெக்ஸ் ஃபண்ட்களாகவும் ETFகளாகவும் இவை கிடைப்பதாலும், குறிப்பாக FMPகளுடன் ஒப்பிடுகையில் எளிதில் பணமாக மாற்றத்தக்க தன்மை அதிகம் கொண்டுள்ளன.  அதோடு, மெச்சூரிட்டியைப் பொறுத்தவரை, இவை அதிக நெகிழ்த்தன்மை கொண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் தாங்கள் விரும்பும் முதலீட்டுக் காலத்திற்கு ஏற்பப் பொருத்தமான முதிர்ச்சித் தேதியைக் கொண்டுள்ள ஃபண்டைத் தேர்வு செய்ய முடியும். சிறிது காலத்திற்கு முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும், ஓரளவு நிலையான ரிட்டர்ன்ஸ் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளில் டார்கெட் மெச்சூரிட்டி டெப்ட் இன்டெக்ஸ் ஃபண்ட் அல்லது டார்கெட் மெச்சூரிட்டி ETFகளைச் சேர்க்கலாம்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்