SIP-இன் பலன்கள் என்னென்ன?

SIP-இன் நன்மைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்ய SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) அனுமதிக்கிறது.

SIP பிளானின் முக்கியமான நன்மைகள்:

- முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை, முதலீடு செய்யப்படும் கால இடைவெளி, முதலீட்டுக் கால அளவு ஆகியவற்றைத் தேர்வுசெய்ய முடியும் என்பதால், நெகிழ்வுத்தன்மை கொண்ட முதலீட்டு முறையாக இது உள்ளது. கையில் தயாராக பெரிய தொகையை வைத்திருக்காத முதலீட்டாளர்களுக்கு இது சௌகரியமான தீர்வாகும்.

- மாதந்தோறும் ரூ.100 முதல் எவ்வளவு குறைவான தொகையையும் முதலீடு செய்யத் தொடங்கலாம்
- இந்த முறையில் முதலீட்டாளர் தேர்வுசெய்த கால இடைவெளிக்கு ஏற்ப, நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது காலாண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதற்கு என்று ஒதுக்கி வைக்க வேண்டி இருப்பதால், இது ஒழுக்கமான முதலீட்டுப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. 
- ருப்பீ காஸ்ட் ஏவரேஜிங் என்பது SIP முதலீடுகளின் மற்றொரு நன்மையாகும். காலப்போக்கில் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களின் செலவை ஏவரேஜிங் செய்ய இது உதவுகிறது. மார்க்கெட்டின் ஏற்ற இறக்கமான தன்மையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். 
- ஒருவர் நீண்ட கால அளவில் முதலீடு செய்யும்போது SIPகள் கூட்டு வட்டியின் ஆற்றலை வழங்குகின்றன.

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
 

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்