ஐந்து ஆண்டு காலத்திற்குச் சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்னென்ன?

ஐந்து ஆண்டு காலகட்டத்துக்கு எந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மேற்கண்ட கேள்விக்கு சரியான பதில் என்னவாக இருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்

முதலீட்டாளர்களுடன் கணிசமான அளவில் கலந்துரையாடினாலும் கூட, முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் திட்டமிடுகின்ற காலகட்டத்தில் சிறந்த ரிட்டர்ன்களை வழங்கிடும் திட்டத்தைக் கண்டறிவதே மறைமுகமான, பெரும்பாலும் வெளிப்படுத்தப்படாத ஒரு தேவையாக இருக்கும்.

உண்மையில், எவ்வளவு காலம் முதலீட்டைத் தக்க வைக்க வேண்டும் என்பதை கணிப்பது முதலீட்டாளர்களுக்கும் கூட கடினமான ஒரு விஷயம்தான். சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதையும், குறிப்பிட்ட காலகட்டத்தின் போது எந்தத் திட்டம் மற்றும் மேலாளரால் சாதகமான முடிவுகளைப் பெற்றுத்தர இயலும் என்பதையும் கணிப்பது சாத்தியமில்லை.

ஒரு சூழலில் நன்றாக உள்ள ஒன்று, மற்றொரு சூழலில் நன்றாக இல்லாமல் போகலாம். உதாரணத்திற்கு, கோடைக்காலங்களில், உங்களுக்கு குளிர்கால ஆடைகளுக்கான தேவை இல்லாமல் போகலாம். அதேபோன்று, வளரும் குழந்தைக்கு வாழைப்பழம் நல்லது என்றாலும், நீரிழிவு நோய் கொண்ட தந்தைக்கு அது கெடுதலை ஏற்படுத்தலாம்.

பல நிபுணர்களால் எதிர்காலத்தை சரியாகக் கணிக்க இயலாமல் போன பல சூழல்களும் வரலாற்றில் உள்ளன. எனவே, கடந்தகால செயல்திறன்களின் அடிப்படையில் தீர்மானம் செய்யாமல், ஒருவரின் தனிப்பட்ட நடப்புச் சூழ்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தை நாடுவது சிறந்தது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்