டெப்ட் ஃபண்டுகள் என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டெப்ட் ஃபண்ட் என்பது மூலதனப் பெருக்கத்தை வழங்கக்கூடிய, கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெப்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் பணச்சந்தைப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானம் அளிக்கும் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். டெப்ட் ஃபண்ட்கள் என்பது இன்கம் ஃபண்ட்ஸ் அல்லது பாண்டு ஃபண்ட்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

குறைந்த கட்டணக் கட்டமைப்பு, ஒப்பீட்டளவில் நிலையான ரிட்டர்ன்கள், ஒப்பீட்டளவில் அதிக பணப்புழக்கம் மற்றும் நியாயமான பாதுகாப்பு ஆகியவை டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வதிலான பெரும் நன்மைகள் ஆகும்.

வழக்கமான வருமானத்தை விரும்பக்கூடிய, அபாயத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு டெப்ட் ஃபண்ட்கள் ஏற்றவை. டெப்ட் ஃபண்ட்கள் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்டவை என்பதால், ஈக்விட்டி ஃபண்ட்களை விடக் குறைந்த அபாயம் கொண்டவை. வழக்கமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகளான வங்கி டெபாசிட்கள் போன்றவற்றில் நீங்கள் சேமித்து வந்து, குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட நிலையான ரிட்டர்ன்களை எதிர்பார்க்கின்ற பட்சத்தில், டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறந்த தேர்வாக இருக்கக்கூடும். ஏனென்றால், வரி நன்மையுடன் சேர்த்து இவை உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு உதவிடும் என்பதால், சிறந்த ரிட்டர்ன்களைப் பெற்றுத் தரும்.

செயல்பாட்டைப் பொறுத்தவரை, பிற மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் இருந்து டெப்ட் ஃபண்ட்கள் முற்றிலும் மாறுபட்டவை. எனவே, மூலதனத்தின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை விட, இவை அதிகப் பாதுகாப்பானவை.

344
398
345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்